இந்தியாவின் மிகப்பெரிய EDTECH நிறுவனமாக விளங்கும் பைஜூஸ் நிறுவனத்தை நடத்துவதற்கு, அதன் நிறுவனரான பைஜு ரவீந்திரன் தகுதியற்றவர் என்று அறிவிக்கக் கோரி, நான்கு பைஜூஸ் முதலீட்டாளர்கள் NCLT-யில் அடக்குமுறை, தவறான நிர்வாக செய்வதாக வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அசாதாரண பொதுக் கூட்டத்தில் (EGM) இந்த முடிவு எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

Byjus-இன் நிர்வாகத்திற்கு எதிரான இந்நிறுவன முதலீட்டாளர்கள் தொடுத்த வழக்கில் தடயவியல் தணிக்கை அறிக்கை கேட்டது மட்டும் அல்லாமல், இந்நிறுவனத்தை நிர்வாகம் செய்ய புதிய நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும் என்றும், உரிமைகள் வழங்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பைஜூஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் நடந்த அசாதாரண பொதுக் கூட்டத்தில், பைஜு ரவீந்திரன் மற்றும், பைஜு ரவீந்திரனின் மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் நிறுவனர் மற்றும் CEO ஆக பைஜு ரவீந்திரன், இணை நிறுவனர் பதவியில் அவரது மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு குடும்ப நிறுவனமாகவே ஆரம்பக்காலத்தில் இருந்து இயங்கி வந்தது.
பைஜூஸ் நிறுவனத்தின் நிர்வாகம் நிதியியல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம், பல்வேறு நிதி பரிமாற்றங்கள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்தது ஆகியவற்றை காரணம் காட்டி ஆடிட் நிறுவனங்கள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆண்டு நிர்வாக உறுப்பினர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் தற்போது பைஜு ரவீந்திரன், திவ்யா கோகுல்நாத், ரிஜு ரவீந்திரன் ஆகிய 3 பேரும் பெரும் ஆதிக்கத்துடன் உள்ளனர்.
ரவீந்திரன் குடும்ப உறுப்பினர்கள் உயர்மட்ட பொறுப்பில் இருந்துகொண்டு நிறுவனம் பங்குதாரர்களுக்கு முழுமையான விளக்கத்தைக் கொடுப்பது இல்லை, வெளிப்படை தன்மையுடன் இருப்பதில்லை என முதலீட்டாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதேவேளையில் EGM-ன் போது நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானங்களையும் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் பைஜூஸ் நிர்வாகம் தடை உத்தரவைப் பெற்றுள்ளது முக்கியமான விஷயம். ஆனால் தற்போது முதலீட்டாளர்கள் NCLT அமைப்பிடம் வழக்கு தொடுத்துள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தில் நிலுவையில் உள்ள நிர்வாகம் பணிகள், நிதி முறைகேடு மற்றும் இணக்கச் சிக்கல்களில் உடனடி தீர்மானத்தைக் கொண்டு வர, அதன் முதலீட்டாளர்கள் சில நாட்களுக்கு முன்பு EGM எனப்படும் Extraordinary General Meeting தேவை என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதுபோன்ற EGM கூட்டம் நிறுவனத்தில் அவசரக் காலத்தில் தான் முன்வைக்கப்பட்டும்.
சமீபத்தில் அமெரிக்கக் கிளை நிறுவனத்தைத் திவாலானதாக அறிவித்து பைஜூஸ், திவால் பாதுகாப்பைக் கோரி அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் சாப்டர் 11 என்ற அதிகாரப்பூர்வ திவால் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது.
மேலும் Byju's நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான பைஜு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் சர்குளர் (LOC) வெளியிடுமாறு அமலாக்க துறை, மத்திய குடிவரவு பணியகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது என நேற்று தகவல் வெளியானது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications