இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ்-ன் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் முதலீட்டாளர்கள், இன்று அசாதாரண பொதுக் கூட்டத்திற்கு (EGM) அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒரு கூட்டத்திற்காகத் தான் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களும் காத்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் திங்க் அண்ட் லேர்ன் நிறுவனம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் தொடர்பான நிறுவனத்தின் உரிமைகளைச் செயல்படுத்துவதில் பைஜூஸ் நிர்வாகம் தோல்வி அடைந்தது குறித்த கேள்விகள் முன்வைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து டேவிட்சன் கெம்ப்னர் உடனான கடன் விதிமுறைகளில் கடினமான மற்றும் பாரபட்சமான விதிமுறைகள் ஒப்புக்கொண்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதைவிட முக்கியமாக பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்நிறுவனத்தில் தலைமைப் பொறுப்புகளில் இருந்து வெளியேற்றுமாறு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்த நிலையில், இதற்கான முடிவும் இன்று எடுக்கப்படும்.
இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் நிறுவனர் மற்றும் CEO பைஜு ரவீந்திரன், அவரது இணை நிறுவனர் மற்றும் மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு மற்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த 3 பேரும் பெரும் ஆதிக்கத்துடன் உள்ளனர்.
ரவீந்திரன் குடும்ப உறுப்பினர்கள் உயர்மட்ட பொறுப்பில் இருந்துகொண்டு நிறுவனம் பங்குதாரர்களுக்கு முழுமையான விளக்கத்தைக் கொடுப்பது இல்லை என முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளது.
இதேவேளையில் EGM-ன் போது நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானங்களையும் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் பைஜூஸ் நிர்வாகம் தடை உத்தரவைப் பெற்றுள்ளது. ஆனால் பைஜூஸ் நிர்வாகத்தின் பங்குதாரர்களின் அவசர கூட்டத்தை நிறுத்த நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் Byju's நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான பைஜு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் சர்குளர் (LOC) வெளியிடுமாறு அமலாக்க துறை, மத்திய குடிவரவு பணியகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது என நேற்று தகவல் வெளியானது.


Click it and Unblock the Notifications