பைஜூ அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 5% பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக கடந்த அக்டோபர் 12 அன்றே அறிவித்திருந்தது. இது அதன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தற்போது அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து அதன் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
பைஜூவில் தற்போது 50,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நோட்டீஸ் பிரீயர்டு
ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலின் படி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 15 நாட்கள் நோட்டீஸ் பிரீயர்டை வழங்க வேண்டும். இந்த நோட்டீஸ் பிரீயர்டு காலத்திற்கு சம்பளமும் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை.
பணி நீக்கத்திற்கு என்ன காரணம்?
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் BTக்கு அளித்த பேட்டியில் தான், பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு நிறுவனம் எந்த காரணத்தையும் கூறவில்லை.
ஊழியர்கள் தங்களது இறுதி தீர்வு செயல்முறையை முடிக்க, நிறுவனம் அது தொடர்பான அனைத்து சொத்துகள் மற்றும் மற்ற முக்கிய தகவல்களை சமர்பிக்கவும் கூறியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து பைஜூவின் HR குழு ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
எத்தனை பேர் பணி நீக்கம்?
பைஜூ இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்க உதவி செய்யும். இதற்காக ஒரு பணியிட குழுவை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
பைஜூவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2500-க்கும் மேற்பட்டதாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இன்சூரன்ஸ் சலுகை
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது முழு குடும்பங்களின் இன்சூரன்ஸ் பலன்களை, இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க எடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
நிறுவனத்தில் இருந்து பிரிந்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் ஊழியர்கள் சரியான வேலையை பெறத் தவறினால், அவர்களின் நிலைமையை மதிப்பீடு செய்து மீண்டும் நிறுவனம் பணியமர்த்திக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
திங்க் & லேர்ன்
பைஜூவின் தாய் நிறுவனமான திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நிறுவனத்தின் செயல்பாடுகளை மூட முடிவு செய்துள்ளதாகவும், அங்கு 170 ஊழியர்கள் பணி புரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை மறுத்த பைஜூ, திங்க் & லேர்ன் 140 பேர் பணிபுரிந்து வருவதாகவும், இந்த ஊழியர்கள் பெங்களூருவுக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இவர்கள் பணி நீக்கம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications