உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பணி நீக்கம் என்பது மிக மோசமான அளவில் இருந்து வருகின்றது. குறிப்பாக டெக் நிறுவனங்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப்கள் வரையில் பரவலாக இருந்து வருகின்றது.
இந்தியாவினை பொறுத்த வரையில் பணி நீக்கம் என்பது பரவலாக காணப்பட்டாலும், ஸ்டார்ட் அப் துறைகளில் இது மிக அதிகம். குறிப்பாக கல்வித்துறை சார்ந்த ஸ்டார்ட் அப்களில் மிக அதிகம் எனலாம்.
ஏற்கனவே ஓலா தொடங்கி மீசோ வரையில் பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன.
பணி நீக்கம்
தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பட்டியலில் பைஜூவும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க பட்டியலில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கையில் இன்ஜினியரிங் குழுவில் இருக்கலாம் என தெரிகிறது.
பிரெஷ்ஷர்கள் அதிகம்
இந்த நடவடிக்கையானது இன்ஜினியரிங் குழு மட்டும் அல்லாது, பல துறைகளிலும் இருப்பதாக தெரிகிறது. எனினும் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை.
நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் பிரெஷ்ஷர்கள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்பே பணி நீக்கம்
பைஜூ நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 30% ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த பணி நீக்க நடவடிக்கையில் டெக் ஊழியர்கள் மற்றும் இன்ஜினியரிங் குழுவில் அதிக பணி நீக்கம் என்பது இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 15% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செலவு குறைப்பு நடவடிக்கை
கடந்த அக்டோபர் மாதமே நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் 5% பேரை பணி நீக்கம் செய்தது. சுமார் 2500 பேர். பைஜூவின் மொத்த ஊழியர் தொகுப்பில் 50,000 பேர் ஆகும். பைஜூ நிறுவனத்தின் ரவீந்திரன் நிறுவனம் லாபத்திற்கு திரும்ப தேவையான அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் முக்கியமாக பார்க்கப்படுவது பணி நீக்கம் தான். இது செலவினை குறைத்து லாபத்திற்கு முன்னேற வழிவகுக்கலாம்.
நஷ்டத்தில் பைஜூ
கடந்த 2021ம் நிதியாண்டில் இந்த கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனம் 4589 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது. இதன் வருவாய் விகிதம் 3.3% சரிவினைக் கண்டுள்ளது.
இந்த நிறுவனம் 330 கோடி ரூபாய் செலவினை செய்துள்ளது. இந்த நிறுவனம் பிபா உலக கோப்பையில் ஸ்பான்சராகவும் இருந்தது.


Click it and Unblock the Notifications