ஒருகாலத்தில் உலகளவில் வியந்து பார்க்கப்பட்ட எட்டெக் நிறுவனமான பைஜூஸ் தற்போது, திவால் ஆகாமல் நிறுவனத்தைக் காப்பாற்றினால் போதும் என்ற அளவுக்குச் சென்றுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் சுமார் 22 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட போதிலும், முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளை முதலீடு செய்ய தேடி அலைந்தனர். ஆனால் இன்று பைஜூஸ் நிறுவனமே பணம் வேண்டும் என்று கூறினால் கூட நிதியுதவி செய்ய யாரும் வருவதில்லை.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எட்டெக் நிறுவனமான Byju's, மீண்டும் தனது ஊழியர்களின் சம்பளத்தை அளிக்காமல் தாமதமாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பைஜூஸ் நிர்வாகம் அதன் முதலீட்டாளர்களின் நடவடிக்கையால் நிதி திரட்டுவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகச் சம்பளம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பைஜூஸ் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "மன வருத்தத்துடன், ஆனால் நம்பிக்கையுடனும் உறுதியளிக்கும் செய்தியுடன் உங்களுடன் இன்று பேசுகிறோம். சம்பளம் வழங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். Byju's நிறுவனத்தில் சில தவறான வழிகாட்டுதல்களை வழங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பிப்ரவரி மாத இறுதியில் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, வெற்றிகரமாக நடத்தப்பட்ட உரிமை பத்திர வெளிப்பாடு (Rights Issue) மூலம் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த பொறுப்பற்ற செயலால், தடை நீக்கப்படும் வரை ஊழியர்களின் சம்பள வழங்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று நிறுவனம் குறிப்பில் தெரிவித்துள்ளது.
Byju's நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான உரிமை பத்திர வெளியீடு மூலம் authorised share capital அதிகரிக்க EGM நடத்த மார்ச் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டது. இக்கூட்டத்தைத் தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பெங்களூரு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) அலுவலகம் தடை செய்ய மறுத்துவிட்டது.
கர்நாடக உயர்நீதிமன்றமும், பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனை தலைமை செயல் அதிகாரியாக இருந்து நீக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரி வழங்கிய EGM கூட்ட முடிவுகள் மீதான இடைக்கால தடையைக் கடந்த வியாழக்கிழமை நீட்டித்துள்ளது பைஜூ நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்குச் சாதகமாக அமைந்தது.
மேலும் பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிமை பத்திர வெளிப்பாட்டில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் பைஜூ ரவீந்திரன் பங்குதாரர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Byju's நிறுவனத்தின் உரிமை பத்திர வெளியீடு, நிறுவனத்தின் அதிகபட்ச மதிப்பீடான 22 பில்லியன் டாலரில் இருந்து 99% தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications