Byju Ravindran: அய்யோ பாவம்! ஒரே ஆண்டில் ரூ.29,600 கோடியை இழந்த இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஸ்டார்..!

ஒருகாலத்தில் அவர் ஒரு சாதாரண கணக்கு வாத்தியார். திடீரென அவரை புகழ்ந்து போஸ்டர் அடிக்கும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றிகரமான ஸ்டார்ட் அப் சூப்பர் ஸ்டார் ஆனார். அவரது பெயர் பைஜூ ரவீந்திரன்.

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதித்து அதேவேகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்த அவரது தொழில் பயணம் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது. அப்படி என்னதான் ஆகிவிட்டது ரவீந்திரனுக்கு?

Byju Ravindran: அய்யோ பாவம்! ஒரே ஆண்டில் ரூ.29,600 கோடியை இழந்த இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஸ்டார்..!

கடந்த ஆண்டு ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.30,600 ஆக இருந்தது. ஆனால் இப்போது அவரது நிகர சொத்து மதிப்பு வெறும் ரூ.833 கோடி என்று போர்ப்ஸ் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் கல்வி போதிக்கும் மிகப் பிரமாண்டமான எஜு-டெக் நிறுவனமான பைஜூஸை ரவீந்திரன் கடந்த 2011இல் தொடங்கினார். அந்த நிறுவனம் சுமார் 22 பில்லியன் டாலர்களை மிகக் குறுகிய காலத்தில் ஈட்டியது. இது இந்திய பணமதிப்பில் ரூ.1,83,000 கோடியாகும்.

இந்தியாவிலேயே மதிப்பு மிகுந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு 19 பில்லியன் டாலர் அளவில் இருந்து குறைந்து இப்போது வெறும் 3 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இது இந்திய பண மதிப்பில் ரூ.25,000 கோடியாக உள்ளது. பைஜூஸின் மதிப்பு சரசரவென குறைந்து விட்டது. இது தவிர 2020 நிதியாண்டில் பைஜூ ரவீந்திரனின் நிறுவனம் ரூ.310 கோடி இழப்பு இருந்தது. 2021 நிதியாண்டில் ரூ.4560 கோடி இழப்பு ஏற்பட்டது.

இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு கடந்த 16 மாதங்களில் 86 சதவீதம் குறைந்தது. இதன்மூலம் பைஜூஸ் ரவீந்திரனின் 18 சதவீத பங்கானது 100 மில்லியன் டாலர் ஆனது. கிட்டத்தட்ட ரூ.833 கோடி. பைஜூ ரவீந்திரனும் அவரது மனைவி திவ்யா கோகுல்நாத்தும் சேர்ந்து பைஜூஸை நிறுவினர்.

பைஜூ ரவீந்திரனின் பெற்றோர்கள் கேரளத்தை சேர்ந்த ஆசிரியர்கள்.
கேரளத்தின் கண்ணனூர் அரசு இஞ்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் பட்டம் படித்தவர். புத்திசாலியான பைஜூ இருமுறை கடினமான CAT தேர்வில் வெற்றி பெற்றவர்.

அவரது தொழில் பயணம் கடந்த 2011இல் தொடங்கியது. அவர் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு CAT கோச்சிங் மையத்தை தொடங்கினார்.
ஓரிரு ஆண்டுகளில் அதை நடத்துவதற்கு சில சிரமங்கள் ஏற்பட்டது. இதில் 1.2 பில்லியன் டாலர் கடன் வாங்கியதில் ரூ.9362.35 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒரே ஆண்டில் ரூ.29,600 கோடி இழப்பை சரிகட்டுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியமாகும். எடுத்த காரியத்தை சிரத்தையுடன் செய்யாவிட்டால் இதுபோன்று அதலபாதாளத்துக்கு செல்ல நேரிடும் என்பது பைஜூ ரவீந்திரன் ஒரு முன்னுதாரணமாக தற்போது விளங்குகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+