அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் மிகப்பிரபலமான செயலியான டிக் டாக்கினை அமெரிக்காவில் தடை செய்தார்.
Recommended Video
பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து அப்போது குற்றம் சாட்டி வந்தது.
அதனைத் தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.
டிரம்ப் நிர்வாகம் என்ன கூறியது?
அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கூறியது.
டிரம்புக்கு எதிர்ப்பு
டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தினை நாட முடிவு செய்துள்ளதாக அப்போதே அந்த நிறுவனம் கூறியது. எனினும் அப்போது இது குறித்து விரிவான விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஏறக்குறைய வருடத்திற்கு மேலாக, அமெரிக்காவின் கவலைகளை தீர்க்க முயற்சித்து வருவதாக டிக் டாக் தரப்பில் கூறப்பட்டது.
முக்கூடல் இணைப்பு
ஆரம்பத்தில் அமெரிக்கர்களின் 100 மில்லியன் பயனர்களின் தரவினை, சீனா அரசுக்கு கொடுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் பைட்டான்ஸ் நிறுவனமோ இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் தான் டிக்டாக்கினை தடை செய்யப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னார் ஆரக்கிள்+ வால்மார்ட்+ டிக்டாக் நிறுவனங்களின் இணைப்புக்கு தனது ஆசிர்வாதம் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிறுவனம்
அது மட்டும் அல்ல, டொனால்டு டிரம்ப் டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ், ஆரக்கிள், வால்மார்ட் இவை மூன்றும் இணைந்து செயல்படலாம். இவை மூன்றும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்டாக் நிறுவனம், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
டிக்டாக் குளோபல்
அதோடு இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து, டிக்டாக் குளோபல் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும் என ராய்ட்டர்ஸ் அப்போது கூறியிருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பெரும்பாலும் அமெரிக்கர்கள் இருப்பர். அதோடு அமெரிக்கா பாதுகாப்பு நிபுணரும் அந்த குழுவில் இருப்பர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
யாருக்கு எவ்வளவு பங்கு
இந்த ஒப்பந்தத்தின் படி, புதிய நிறுவனத்தின் 53% பங்குகளை அமெரிக்கா நிறுவனங்களும், 36% பங்குகளை சீனா நிறுவனமும் வைத்திருக்கும். அதோடு முக்கிய தொழில் நுட்பங்களுக்கும், அமெரிக்கர்களின் தகவல் பாதுகாப்புக்கும், ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்கும் என்றும் கூறப்பட்டது. இந்த இணைப்பினால், அமெரிக்கா கருவூலத்திற்கு 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய வரி கிடைக்கும். அதோடு இந்த நிறுவனம் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது, இது இன்னும் திருப்தி அளிப்பதாக உள்ளது என அப்போதைய அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
எங்களிடம் வேறு வழியில்லை
ஆனால் இப்படியெல்லாம் கூறப்பட்ட நிலையில், தற்போது எங்களிடம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தினையும் கூற மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளது.
கூட்டணி என்ன ஆனது?
ஆக வால்மார்ட் _ ஆரக்கிள் நிறுவனங்களிடம் நடந்த பேச்சு வார்த்தை என்னவானது? இந்த ஒப்பந்தம் நீடிக்குமா? இல்லை மீண்டும் வழக்கம்போல் அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்படுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் தற்போது புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் டிக் டாக் தடையை உடைப்பாரா?
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications