வருமான வரி இணையதளத்தில் அடிக்கடி பிரச்னை.. இன்போசிஸ் நிறுவனத்தை வறுத்தெடுக்கும் CA அதிகாரிகள்..!

பெங்களூரு: இந்தியாவில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு வரும் 31ஆம் தேதி தான் கடைசி நாள். எனவே தற்போது ஊதியதாரர்களும், வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வோரும் மிக பிஸியாக இருக்கின்றனர். பட்டயக் கணக்காளர்களும் மிகத் தீவிரமாக தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான வருமான கணக்கினை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் பலர் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முயற்சிப்பதால் வருமான வரி இணையதளம் மெதுவாக இயங்குகிறது அல்லது சில நேரங்களில் இயங்குவதே கிடையாது. இதனால் பெரும்பாலான பட்டை கணக்காளர்களும் வருமான வரி தாக்கல் செய்யக்கூடிய நபர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.

வருமான வரி இணையதளத்தில் அடிக்கடி பிரச்னை.. இன்போசிஸ் நிறுவனத்தை வறுத்தெடுக்கும் CA அதிகாரிகள்..!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யக்கூடிய இணையதளமானது இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஆண்டு இன்போசிஸ் இணை நிறுவன நாராயண மூர்த்தி நாட்டின் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறியிருந்தார் அது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாசு என்கிற ஒரு நபர் " நாராயணமூர்த்தி ஐயா , இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என நீங்கள் கூறினீர்கள். அதன்படி எங்களைப் போன்ற வருமான வரி தாக்கல் செய்யக்கூடிய நபர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்கிறோம்.

தயவுசெய்து உங்களுடைய இன்போசிஸ் குழுவினரை வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது வேலை செய்து வருமான வரி இணையதளம் சரியாக செயல்படுவதை உறுதி செய்யுங்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு எக்ஸ் வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி இருக்கிறது. பல்வேறு பட்டய கணக்காளர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிலர் ஆண்டு தகவல் அறிக்கை மற்றும் வரி தகவல் அறிக்கை மற்றும் பிற வரி சார்ந்த தகவல்களை பதிவிறக்கம் செய்வது செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது மிகவும் தாமதம் ஆவதாக தெரிவிக்கிறனர்.

வருமான வரி இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். நாட்டில் உள்ள பல்வேறு பட்டய கணக்காளர் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் வருமான வரி இணையதளம் தாமதமாக இயங்குவதாக தொடர்ந்து புகார்களை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு வரும் 31ஆம் தேதி தான் கடைசி நாள் என்பதால் இனிவரும் நாட்களில் இன்னும் பலர் இணையதளத்தை அணுகுவார்கள்.

எனவே இணையதளம் இன்னும் மெதுவாக இயங்கும் எனக் கூறும் பட்டய கணக்காளர்கள் இன்போசிஸ் நிறுவனம் இதனை கருத்தில் கொண்டு இணையதளம் வேகமாக இயங்குவதையும் அதில் உள்ள பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+