சமூக ஊடகங்கள் ஒரே இரவில் வெற்றி பெறும் கதைகளையும், ஆபத்தான முதலீடுகளையும் பெரிதும் புகழும் இந்த காலத்தில், பட்டயக் கணக்காளர் நிதின் கௌசிக் தனிநபர் நிதி குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளார். சமீபத்தில் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "விரைவில் பணக்காரராகும்" திட்டங்களைத் துரத்துவதற்கு பதிலாக, நீடித்த நிதி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 3 எளிய படிகளை கற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். செல்வம் உருவாகுவது குறுக்குவழிகளால் அல்ல, ஒழுக்கமான முயற்சி மற்றும் தொடர்ச்சியான பழக்கவழக்கங்களால் மட்டுமே சாத்தியம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, அவர் கூறும் நிதி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் 3 படிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
வருமானத்தை நோக்கத்துடன் அதிகரிக்க வேண்டும் :கௌசிக்கின் முதல் கொள்கை வருமானத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அனைத்து துணை வேலைகளிலும் குதிக்க வேண்டும் என்பதல்ல. அதற்கு பதிலாக, புதிய மற்றும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வது, புத்திசாலித்தனமாக வேலை செய்வது, சம்பளத்தை திறம்பட பேசும் திறனை மேம்படுத்துவது முக்கியம். மாதத்திற்கு ரூ.5,000 போன்ற ஒரு சிறிய வருமான உயர்வும், நீண்ட காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார். தற்காலிக ஆதாயங்களை விட, நிலையான வருமான வளர்ச்சியே நிதி அடித்தளத்தை உறுதிப்படுத்தும் என்பதை கௌசிக் வலியுறுத்துகிறார்.

தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும் :கௌசிக்கின் சூத்திரத்தின் இரண்டாம் பகுதி, கடுமையான சிக்கனத்தை விட விழிப்புணர்வுடன் செலவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். செல்வத்தை உருவாக்க, வசதிகளை மறுத்து, கடுமையாக சிக்கனமாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் கூறுகிறார். அதற்கு மாறாக, தினசரி தேவையில்லாத ஆடம்பரங்களை தவிர்ப்பது, திடீரென ஒரு பொருளை வாங்குவதை நிறுத்திக் கொள்வது மற்றும் உண்மையாக மதிப்பு சேர்க்கும் செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற சிறிய மாற்றங்களை கொண்டு வந்தாலே போதும். செலவுகள் குறுகியகால ஆசைகளை விட, நீண்டகால இலக்குகளுடன் இணைந்தால், நிதி ஆரோக்கியம் தானாகவே மேம்படும் என்று அவர் கூறியுள்ளார். இது "சிக்கனம்" அல்ல.. சிந்தனையுடன் செலவிடும் பழக்கம்" என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
கூட்டு வட்டியை வேலை செய்ய விடுங்கள் :கௌசிக்கின் மூன்றாவது மற்றும் மிக முக்கியமான படி முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது. பணவீக்கம் காலப்போக்கில் அதன் மதிப்பை மெதுவாக அரித்துவிடுவதால், வெறும் சேமிப்பு மட்டும் போதாது என்று அவர் எச்சரித்துள்ளார். சிறிய தொகையாக இருந்தாலும், மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வதன் மூலம், கூட்டு வட்டியின் சக்தியைப் பயன்படுத்தி ஒருவர் தனது செல்வத்தை சீராக வளர்க்க முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். வெறும் சேமிப்பு மட்டும் ஆண்டுதோறும் பணவீக்கம் உங்கள் பணத்தை மெதுவாக அரிப்பதைத் தடுக்காது என்றும் முதலீடுதான் நிதி வளர்ச்சியின் உண்மையான உந்துசக்தி என்பதை உறுதியாக கூறுகிறார்.
சிக்கலைத் தாண்டி நிலைத்தன்மையில் கவனம் : தனிநபர் நிதி என்பது எந்த மர்மமோ அல்லது ரகசியமான சூத்திரமோ அல்ல. அதிகம் சம்பாதிப்பது, புத்திசாலித்தனமாக செலவிடுவது, மேலும் விவேகத்துடன் முதலீடு செய்வது இந்த மூன்று கொள்கைகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில்தான் நிதி வெற்றியின் உண்மையான ரகசியம் உள்ளது. இந்த மூன்று தூண்களைச் சீராக மேம்படுத்துவதுதான் முக்கியம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications