பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று இந்திய காப்பீட்டுத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீட்டு அளவுகளை அதிகரிப்பது குறித்து முக்கிய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சரவை இன்று காப்பீட்டுத் துறையில் சார்ந்த் நிறுவனங்களில் இருக்கும் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதோடு இத்துறையை வலுப்படுத்த பல சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இது இந்திய காப்பீட்டுச் சந்தையில் புதிய பாதைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் சுமார் 82,000 கோடி ரூபாய் அளவிலான நேரடி முதலீடு வந்துள்ளது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் மூலம் இந்த முதலீட்டு அளவை அடுத்த 5 வருடத்தில் இரட்டிப்பாக்கலாம். இதோடு இந்த மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19 உடன் முடிவடைகிறது.
மேலும் மத்திய நிதியமைச்சகம் இன்சூரன்ஸ் சட்டம் 1938ல் பல புதிய மாற்றங்களை கொண்டு வரவும், இதோடு 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுக்கு மாற்றத்தையும் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என பரிந்துரை செய்துள்ளது.
100% FDI என்றால் என்ன?
தற்போது காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டு அளவு 74 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இப்போது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முழு உரிமையுடன் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை முழுமையாக வாங்கலாம். இதனால் பல நூறு பில்லியன் டாலர் முதலீடு புதிதாக வர வாய்ப்புள்ளது.
சாதாரண மக்களுக்கு என்ன பயன்?
இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் உலகளவில் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம், அதிக மூலதனம், சிறந்த சேவை தரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வாய்ப்பாக அமையும். இதேவேளையில் சாதாரண மக்களுக்கு காப்பீட்டுக் ப்ரீமியம் விலை குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
போட்டி அதிகரிக்கும்
இந்த மாற்றம் காப்பீட்டுத் துறையில் போட்டியை அதிகரிக்கும். தற்போது 30க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதால் சேவை தரம் உயரும், புதிய பாலிசிகள் அறிமுகமாகும்.
குறிப்பாக லைப் இன்சூரன்ஸ், சுகாதார காப்பீடு, வாகன காப்பீடு போன்றவற்றில் புதிய திட்டங்கள் வரலாம். இது மக்கள் மத்தியில் காப்பீட்டு திட்டத்தை பெறுவது அதிகரிக்கும். தற்போது இந்தியாவில் காப்பீட்டு ஊடுருவல் சர்வகதேச சராசரியை விட குறைவு.
இந்திய பொருளாதாரத்துக்கு லாபம்
100 சதவீத FDI அனுமதி இந்தியாவுக்கு பல வழிகளில் பயன் தரும். முதலாவதாக பெரிய அளவில் வெளிநாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வரும். இரண்டாவதாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மூன்றாவதாக காப்பீட்டு நிறுவனங்களின் மூலதனம் வலுவடைந்து பெரிய அளவில் கிளைம்-களை சமாளிக்க முடியும். நான்காவதாக தொழில்நுட்பம், AI, டிஜிட்டல் சேவைகள் இத்துறையில் வேகமாக வரும். இது இந்தியாவை உலகின் முக்கிய காப்பீட்டு சந்தையாக மாற்றும்.


Click it and Unblock the Notifications