இந்திய ரயில்வே நெட்வொர்க் 300 கிமீ விரிவாக்கம்! வருகிறது 14 புதிய ரயில் நிலையங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் 3 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 திட்டங்களும் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான மொத்த மதிப்பீடு 6,456 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த திட்டங்களில் 2 புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் மற்றும் மல்டி ட்ராக்கிங் அமைப்பதற்கான ஒப்புதல் ஆகியவை அடங்கும்.

இந்த மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்கள் இந்திய ரயில்வே நெட்வொர்க்கை சுமார் 300 கி.மீ. விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய ரயில்வே நெட்வொர்க் 300 கிமீ விரிவாக்கம்! வருகிறது 14 புதிய ரயில் நிலையங்கள்!

புதிய வழித் திட்டங்கள் நேரடி இணைப்பை வழங்கும் மற்றும் ரயில்வே இயக்கத்தை மேம்படுத்தும். மல்டி-டிராக்கிங் திட்டம் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும், இந்திய ரயில்வே முழுவதும் மிகவும் பரபரப்பான பிரிவுகளில் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டை வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூ. 6,456 கோடி செலவில் மூன்று ரயில்வே திட்டங்களும், PM-Gati Shakti தேசிய மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களில் இரண்டு புதிய ரயில் பாதைகள் மற்றும் ஒரு மல்டி-ட்ராக்கிங் ஆகியவை அடங்கும். இது ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் முழுவதும் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய ரயில் பாதைகளாகும்.

மல்டி-டிராக்கிங் திட்டம் இந்திய ரயில்வேயின் மிகவும் பரபரப்பான சில இடங்களில் செயல்பாடுகளை எளிதாக்கும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக 14 புதிய நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில் பாதைகள் சுமார் 1,300 கிராமங்களை இணைக்கும் மற்றும் சுமார் 11 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விவசாய பொருட்கள், உரங்கள், நிலக்கரி, இரும்பு தாது, ஸ்டீல், சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்களை கொண்டு செல்லும் வகையில் சரக்கு போக்குவரத்திற்கு பயனளிக்கும்.

இந்த 3 திட்டங்களின் மூலம் ரயில்வே நெட்வொர்க் இன்னும் விரிவடைந்து மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி ட்ராக் அமைப்பதன் மூலம் ஒரே நேரத்தில் பல ட்ரெயின்களின் வரத்து இருக்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடையின்றி சரக்கு ரயில்களும் பயணிகள் ரயில்களும் இயங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+