மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த DA உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்து இன்று தெரிவித்தார். இதன் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாடத்தில் உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA அளவை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது தீபாவளி பரிசாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பணவீக்க அளவுகளை அடிப்படையாக வைத்து அரசு ஊழியர்களுக்கான DA அளவை உயர்த்துகிறது. வழக்கமாக மத்திய அரசு அகவிலைப்படி அளவை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படும்.

DA அளவை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்துவது மூலம் 47 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். மேலும் இந்த 4 சதவீத அகவிலைபடி உயர்வு மூலம் 18000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியருக்கு கிடைக்கு 7560 ரூபாய் DA தொகை 8280 ரூபாயாக அதிகரிக்கும். சுமார் 720 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
இதேபோல் 56900 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட மத்திய அரசு ஊழியருக்கு கூடுதலாக DA-வில் 2276 ரூபாய் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் விலைவாசி உயர்வை ஈடுகட்ட DA வழங்கப்படுகிறது. இந்தியாவில் பணவீக்கம் காரணமாக Cost Of Living ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகரிக்கிறது, இதை CPI-IW மூலம் கணக்கிட்டு DA மூலம் மத்திய அரசு ஈடு செய்கிறது. இந்தக் கொடுப்பனவு ஒரு வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அளவை, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த குறியீடு தான் டிஏ அளவை எந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அளவீட்டை, தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும், தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.
மேலும் மத்திய அரசு அடுத்த சந்தைப்படுத்தல் பருவத்தில் ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) 7 சதவீதத்திற்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் மசூர், பார்லி மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றிற்கு 7 சதவீத MSP உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications