பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று அணு ஆற்றல் (Atomic Energy) துறையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அணு ஆற்றல் மசோதா 2025 அல்லது SHANTI Bill (Sustainable Harnessing of Advancement of Nuclear Energy for Transforming India) என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது மூலம் இந்திய அணு ஆற்றல் துறையில் இதுவரையில் இந்திய அரசு மட்டுமே முதலீடு செய்து வந்த நிலையில் முதல் முறையாக தனியார் முதலீட்டுக்கு கதவுகளை திறக்கப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவை கொண்டு வர முக்கியமான காரணம் மத்திய அரசு 2047க்கு 100 GW அணு ஆற்றல் திறனை அடைய வேண்டும் என்ற முக்கியமான இலக்கை வைத்துள்ளது தான். இந்த இலக்கை அடைய அரசின் முதலீட்டு மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்காது, இதனால் தனியார் முதலீட்டையும் உதவியும் ஈர்க்கும் வகையில் அணு ஆற்றல் மசோதா 2025 உருவாக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் இந்த இலக்கை உருவாக்க முக்கியமான காரணமாக இருந்தது, இந்தியாவின் எனர்ஜி தேவையை கிளீன் எனர்ஜி வாயிலாக பூர்த்த செய்ய வேண்டும் என்பதற்காக மாற்று பாதையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் அணு ஆற்றல் துறையில் இதுவரை அணு ஆற்றல் துறை அமைச்சகம் (DAE) மட்டுமே கட்டுப்படுத்தியது. SHANTI மசோதா மூலம் இத்துறையில் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு திறக்கிறது.
பிரதமர் மோடி நவம்பர் மாத இறுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அணு ஆற்றல் துறையை விண்வெளி துறை போல தனியாருக்கு திறக்க திட்டமிட்டு வருவதாக அறிவித்திருந்தார். இதன் நீட்சியாக தற்போது மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முதல் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு SHANTI மசோதா தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரில் (டிசம்பர் 19 வரை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதாவில் அணு ஆற்றல் துறையில் ஒழுங்குமுறை, பாதுகாப்பு, தனியார் பங்கு விதிகளை தெளிவுபடுத்தும். புதிய சட்டம் அமலான பிறகு தனியார் நிறுவனங்கள் அணு திட்டங்களில் பங்கேற்கலாம்.


Click it and Unblock the Notifications