ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகப் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் அனைவரும் மத்திய அரசின் எல்ஐசி ஐபிஓ-விற்காக காத்திருக்கும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
எல்ஐசி ஐபிஓ
இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஐபிஓ மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட்டு சுமார் 65000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த மாபெரும் ஐபிஓ-வில் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை அளிக்க உள்ளது மத்திய அரசு.
20 சதவீதம்
நாடாளுமன்றத்தில் எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீதம் வரையிலான பங்குகளைக் கைப்பற்ற அன்னிய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
முதலீட்டுச் சட்டம்
தற்போது இருக்கும் சட்டதிட்டங்கள் படி எல்ஐசி நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது. இதற்காக மத்திய அரசு சில நாட்களுக்கு முன் அன்னிய முதலீட்டாளர்கள் இந்த எல்ஐசி ஐபிஓ-வில் முதலீடு செய்யத் தடையாக இருந்த முக்கியமான சில விஷயங்களை நீக்க முதலீட்டுச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு
இந்தியாவில் ஒட்டுமொத்த லைப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் சுமார் 66 சதவீத சந்தையைக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்குச் சிங்கிள் நிறுவனமாகத் தண்ணி காட்டி வரும் எல்ஐசி நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக 5 சதவீத பங்குகளை மோடி அரசு விற்பனை செய்கிறது.
அன்னிய முதலீட்டாளர்கள்
இந்த 5 சதவீத பங்குகள் மூலம் மத்திய அரசு 62,000 முதல் 65000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை திரட்ட உள்ளது. இந்த மாபெரும் ஐபிஓ மட்டும் கணக்கிட்டால் அன்னிய முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டு அளவான 20 சதவீதம் வரையில் ஒதுக்கப்படும் பட்சத்தில், எல்ஐசி நிறுவனத்தின் 1 சதவீத பங்குகள் முழுவதுமாக அன்னிய முதலீட்டாளர்கள் கையில் செல்கிறது.
20 சதவீத ஆதிக்கம்
ஆனால் தற்போது மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக 20 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் அளவிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஐபிஓ-வில் இந்திய ரீடைல் முதலீட்டாளர்களைக் காட்டிலும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications