பிரிட்டன் நாட்டின் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக உலக நாடுகளில் சொத்து வழக்குகள் மூலம் எப்போது எந்தச் சொத்தை கைப்பற்றும் என மத்திய அரசு பயந்துக் கொண்டு இருந்த வேளையில், இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த retrospective வரிச் சட்டத்தை மொத்தமாக நீக்கியுள்ளதன் மூலம் கெய்ர்ன் எனர்ஜி மூலம் பெரும் தொகையைப் பெற உள்ளது.
இதனால் கெய்ர்ன் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராகத் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளது.
கெய்ர்ன் நிறுவனம்
மத்திய அரசு தலைவலியாக இருந்து retrospective வரிச் சட்டத்தை நீக்கியதன் வாயிலாக, கெய்ர்ன் நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெற உள்ளது. இது நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த தொகையை விடவும் குறைவாக இருந்தாலும் கெய்ர்ன் ஏற்றுக்கொண்டது.
1 பில்லியன் டாலர் வரி ரீபண்ட்
இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது 1 பில்லியன் டாலர் அளவிலான வரி ரீபண்ட் தொகையைப் பெற்ற பின் அடுத்த 2 நாட்களில், இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்ற பிரான்ஸ் முதல் அமெரிக்கா வரையில் தொடுத்த வழக்கை வாபஸ் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
பின்னோக்கி வரிவிதிப்பு
கெய்ரன் எனர்ஜி, வோடபோன் ஆகிய நிறுவனத்தின் மீது வரி கோரப்பட்ட Retrospective taxation அதாவது பின்னோக்கி வரிவிதிப்பு விதிகளை நீக்கக் கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. இது இரு நிறுவனங்களுக்கும் பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.
விளக்கம்
பின்னோக்கி வரிவிதிப்பு விதிகள் மூலம் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமை மாறும் போது வரித்துறை 50 வருடங்களுக்கு முன் சென்று கேப்பிடல் கெயின் வரியை விதிக்க முடியும். இந்த வரிச் சட்டத்தை நீக்கக் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
6 ஆண்டு வழக்கு
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு தொடுத்த வரி நிலுவை வழக்கு 6 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவ்வழக்கின் தீர்ப்பை சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது.
நஷ்ட ஈடு
இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இது இந்திய அரசு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதை எதிர்த்து வழக்குத் தொடுக்கும் வேளையில் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் அதிரடியாக இயங்க துவங்கியது.
சர்வதேச நடுவர் தீர்ப்பாயம்
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், இந்தியாவிடம் தீர்ப்பில் குறிப்பிட்ட தொகையை உடனடியாகப் பெற வேண்டும் என்பதற்காகச் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, இந்திய அரசுக்குச் சொந்தமாக வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களைக் கைப்பற்றத் திட்டமிட்டது.
பொதுத்துறை வங்கிகள்
இதனால் இந்திய அரசு பொதுத்துறை வங்கிகள் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை இந்தியாவிற்குத் திருப்ப திடீர் உத்தரவையும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமாக வெளிநாட்டில் இருக்கும் சொத்துகளைக் கைப்பற்ற முடிவு செய்த வழக்க விசாரணையை வேகப்படுத்தியது.
ஏர் இந்தியா கைப்பற்றல்
ஏர் இந்தியா சொத்துக்களைக் கைப்பற்றினால் மத்திய அரசு ஏர் இந்தியா விற்பனை செய்யும் திட்டத்தைச் சாத்தியப்படுத்த முடியாது. இதனால் மத்திய அரசு வேக வேகமாக Retrospective taxation அதாவது பின்னோக்கி வரிவிதிப்பு விதிகளை நீக்க முடிவு செய்து அதற்கான பணிகளை வேகப்படுத்தியது. தற்போது அனைத்து பிரச்சனையும் எளிதாக முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications