இந்தியாவிற்கு எதிரான வரி நிலுவை வழக்கில் கெய்ர்ன் எனர்ஜி வெற்றிபெற்ற நிலையில், நீதிமன்றம் அறிவித்துள்ள 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான நஷ்ட ஈடு மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றை விரைவில் இந்தியாவிடம் இருந்து பெற்று வேண்டும் என நோக்கில் கெய்ர்ன் எனர்ஜி அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
வரி நிலுவை வழக்கு
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கைக் கடந்த 6 வருடமாக நடந்த நிலையில், டிசம்பர் மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது. மேலும் இவ்வழக்கின் தீர்ப்பில் இந்திய அரசு பிரிட்டன் அரசு உடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்றும், இதற்கான நஷ்டஈடு-ஐ இந்திய அரசு தான் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கெய்ர்ன் எனர்ஜி வழக்கு
இதன் மூலம் இந்திய அரசு பிரிட்டன் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி-க்கு நஷ்ட ஈடாக 1.2 பில்லியன் டாலர் தொகையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து சுமார் 1.4 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
இந்தத் தொகையை விரைவில் இந்திய அரசிடம் இருந்து பெறுவதற்காகத் தற்போது கெய்ர்ன் எனர்ஜி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு முதல் வரவேண்டிய பேமெண்டுகள், வட்டி ஆகியவற்றை மொத்தமாக இந்திய அரசிடம் இருந்து விரைவாகப் பெற்றுத் தரும்படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
இந்திய அரசின் சொத்துக்கள்
சில நாடுகளுக்கு முன்பு கெய்ர்ன் எனர்ஜி இந்திய அரசு குறித்த தொகையை உடனடியாக அளிக்கவில்லை எனில் வெளிநாட்டில் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றி அதன் மூலம் தனது நஷ்டஈடு தொகையை ஈடு செய்யவும் அதற்கான வழிகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில்ல வழக்குத் தொடுத்துள்ளது கெய்ர்ன் எனர்ஜி.
அமெரிக்கச் சொத்துக்கள்
கெய்ர்ன் எனர்ஜி அமெரிக்காவில் தொடுத்துள்ள வழக்கிற்குச் சாதகமான தீர்ப்பு வந்தால், அமெரிக்காவில் இருக்கும் இந்திய அரசின் சொத்துக்களைக் கைப்பற்றும் முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்காகவே கெய்ர்ன் எனர்ஜி அமெரிக்காவில் தற்போது வழக்குத் தொடுத்துள்ளதாகவும் அறியப்படுகிறது.


Click it and Unblock the Notifications