கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கு 6 வருடமாக நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது.
இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கெய்ர்ன் எனர்ஜி நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த 1.2 பில்லியன் டாலர் தொகைக்கு ஈடான இந்திய அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றத் திட்டமிட்டு வரும் நிலையில், கடந்த வாரம் இந்திய பொதுத்துறை வங்கிகளை வெளிநாட்டுக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தை முழுமையாக வித்டிரா செய்த இந்திய அரசு அறிவுறுத்தியது.
ஏர் இந்தியா மீது வழக்கு
இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் தனது கிடைக்கவேண்டிய 1.2 பில்லியன் டாலர் தொகைக்காக இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.
1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய அரசுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. மத்திய அரசு சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றைச் சேர்ந்து கிட்டதட்ட 1.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வழங்க வேண்டும் என டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
புதிய தனிக் குழு
ஆனால் இதுவரை ஏர் இந்தியாவுக்கும், அரசுக்கும் எவ்விதமான நோட்டீஸ்-ம் வரவில்லை என இதுகுறித்து அறிந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் மற்றும் 1.2 பில்லியன் டாலர் அளவிலான நஷ்ட ஈடு வழக்கை எதிர்கொள்ளவும், விரைவில் இதற்கான தீர்வு காணவும் தனிக் குழுவை அமைத்துள்ளது.
அடுத்தடுத்த வழக்கு
டிசம்பர் மாதம் இந்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் முதல் கெய்ர்ன் எனர்ஜி தனது கிடைக்க வேண்டிய 1.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை விரைவில் இந்தியாவிடம் இருந்து பெற வேண்டும் என நோக்கில் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் கியூபெக் எனப் பல நாடுகளின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications