இந்திய சீனா எல்லை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே #boycott china, #BoycottChineseProducts என்ற பரப்புரைகள் பரவலாக இருந்து வருகிறது.
இந்திய சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்கு மத்தியில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், சீனா வேண்டாம் என்ற வார்த்தைகளை நம்மால் அதிகம் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.
இப்பிரச்சனை நடந்த சில தினங்களுக்கு பின்னரே சீனாவுக்கு தனது எதிர்ப்பினை காட்டும் விதமாக, அப்போதே 500 சீன பொருட்களை தடை செய்யப்போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.
ரக்சா பந்தன் விழா
தற்போது மீண்டும் ஒரு அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 3 அன்று கொண்டாடப்படும் ரக்சா பந்தன் திருவிழாவானது, சகோதர சகோதரிகளின் பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக ரக்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. அது அடுத்த மாதம் வரவிருக்கும் இந்த ரக்சா பந்தன் விழாவையொட்டி, இந்த அதிரடியான முடிவினை CAIT எடுத்திருக்கலாம் என்றும் கூரப்படுகிறது. வாருங்கள். அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
சீன பொருட்கள் புறக்கணிப்பு
வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த விழா, ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இது இந்து பண்டிகை என்றாலும் கூட, மதங்களை தாண்டி அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில் பெரும்பாலும் உபயோகப்படுத்துவது சீன பொருட்களே. ஆக அதனை புறக்கணிக்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் சங்கம் முறையீடு செய்துள்ளது.
இந்திய ராக்கி
நாடு முழுவதும் 40,000 வர்த்தகர்கள் சங்கங்கள் மற்றும் ஏழு கோடி உறுப்பினர்களைக் கொண்ட CAIT, ராக்கி திருவிழாவின் போது சீனாவின் வர்த்தகம் 4,000 கோடி ரூபாய் என தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் இந்திய ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, CAITயின் பெண்கள் பிரிவானது 5000 ராக்கிகளை பாதுகாப்பு துறை அமைச்சருக்கு வழங்கும். இது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் என்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி
CAIT இந்த ரக்சா பந்தன் நேரத்தில் இந்தியாவில் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் காணப்படும், அதில் சீனாவின் பங்கு 4000 கோடி ரூபாயாகும். இது ராக்கிகளாக மட்டும் அல்ல, ராக்கி செய்ய தேவையான பொருட்களாகவும் இறக்குமதி செய்யப்படுகிறது. ராக்கி செய்யப்படும் தேவையான பேப்பர், நூல் முத்துக்கள், ராக்கிக்கான அலங்கார பொருட்கள் என பல பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ராக்கியில் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம்
ஆக தற்போது சீனா பொருட்களை புறக்கணிக்கும் விதமாக இந்த ஆண்டில் ராக்கியில் சீன பொருட்களை பயன்படுத்தப்படாது என்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீனா 4,000 கோடி ரூபாய் வர்த்தகத்தினை சீனா இழக்கக்கூடும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் கன்வீனர் சுஷில் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ராக்கி தயாரிக்க வேண்டும்
அதோடு நகரங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடிகளில் பணிபுரியும் பெண்கள், சிறு கைவினைஞர்கள் மற்றும் பலர் ராக்கிகளை உருவாக்கி சந்தைகளில் விற்க வேண்டும் என்றும் CAIT வலியுறுத்தியுள்ளது. மேலும் அதே நேரத்தில் சிறு நிறுவனங்களும் இந்திய பொருட்களை பயன்படுத்தி இந்த ராக்கிகளை உருவாக்க வேண்டும் எனவும் சுஷில் குமார் ஜெயின் லைவ் மிண்ட் செய்தியில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications