இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இரு நாட்டு ராணுவங்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையில் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தினர் போலவே, சீனாவின் ராணுவத்திலும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், இது குறித்த சீன அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.
சீன இந்திய எல்லை பிரச்சனை
கடந்த ஏப்ரல் பிற்பாதியில் தொடங்கிய இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. எனினும் இந்த பிரச்சனையை தீர்க்க ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. எனினும் அவை அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் தற்போது அது உயிர்சேதம் ஏற்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
இனி வர்த்தகம் என்னவாகும்
ஆனால் சீனா இந்தியா இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ள இந்த நிலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் இனி என்னவாகும் என்பதை பற்றித் தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். ஒரு புறம் பதற்றம் நிலவி வந்தாலும், இதுவரையில் வர்த்தக ரீதியில் பெரியளவு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டிய 500 மேட் இன் சீனா தயாரிப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சீன பொருட்கள் வேண்டாம்
இந்த பட்டியலில் உள்ள தயாரிப்புகளில் பொம்மைகள், துணிகள், ஜவுளி ஆடைகள், அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், ஹார்டுவேர்கள், காலணி, கைப்பைகள், சாமான்கள், மின்னணுவியல், அழகு சாதன பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள், மின்னணுவியல், கைக்கடிகாரங்கள், கற்கள் மற்றும் நகைகள், எழுது பொருட்கள் போன்ற பொருட்கள் உள்ளதாக மனிகண்ட்ரோல் செய்திகள் கூறுகின்றது.
இந்திய பொருட்கள் எங்கள் பெருமை
லடாக் எல்லையில் நடந்த ஆக்ரமிப்பு பற்றி விமர்சித்த இந்த அமைப்பு, சீனாவின் அணுகுமுறையானது நாட்டின் நலனுக்கு எதிரானது என்றும் இந்த வர்த்தக அமைப்பு கூறியுள்ளது. மேலும் CAIT இந்திய பொருட்கள் எங்கள் பெருமை என்றும் தெரிவித்துள்ளது. சீன பொருட்களுக்கு பதிலாக இனி இந்திய பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி
இதன் முதல் கட்டமான டிசம்பர் 2021க்குள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 1 லட்சம் கோடி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக இந்த வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சீனாவில் இருந்து ஆண்டுக்கு 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்திய பொருட்கள் மீது கவனம்
ஆக இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் CAIT தெரிவித்துள்ளது. இது குறித்து CAIT தலைவர் பிசி பார்டியா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் காண்டேல்வால் ஆகியோர், இந்த பொருட்களை தயாரிக்க சிறந்த தொழில் நுட்பம் எதுவும் தேவையில்லை. ஆக அவற்றை இந்தியாவில் தயாரிக்க முடியும். இதன் மூலம் சீன இறக்குமதியை குறைக்க முடியும். இது சீனாவினை இந்தியா நம்பியிருப்பதை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சில பொருட்கள் சேர்க்கப்படவில்லை
எனினும் குறிப்பிட்ட தொழில் நுட்பம் தேவைப்படும் பொருட்கள் தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று பார்டியா மற்றும் காண்டேல்வால் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆக தற்போது சில பொருட்கள் மட்டும் புறக்கனிக்க முடியாது, ஏனெனில் அந்த வகை தொழில் நுட்பத்தின் மாற்று இந்தியாவில் உருவாக்கபடும் வரை வேறு வழியில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது உண்மை தானே
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சலுகைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனையானது வந்துள்ளது. இதனை பற்றி வர்த்தகம் மற்றும் கைத் தொழில் அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச உள்ளதாக தெரிவித்துள்ளது இந்த அமைப்பு. இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உண்மையும் கூட, உள்நாட்டு பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவின் ஜிடிபி விகிதமும் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரமும் மேம்படும் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மையே.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications