சீனா பொருட்கள் வேண்டாம்.. போராட்ட களத்தில் குதிக்கும் CAIT.. மேடு இன் இந்தியாவுக்கு ஆதரவு..!

சில வாரங்களாக சீன பொருட்கள் வேண்டாம், சீனா வேண்டாம். இப்படி சீனாவுக்கு எதிராக பல அமைதியான போர்கள் நடந்து கொண்டுள்ளன. இதற்கு சிறந்த உதாரணமே ரிமூவ் தி சீனா ஆப் தான்.

மே மாதத்தின் பிற்பாதியில், குறுகிய காலத்தில் இந்த ரிமூவ் தி சீன ஆப்- 5 மில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆப், இந்திய நிறுவனமான ஒன் டச் ஆப்லாப்ஸ் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமே சீனா பொருட்கள் வேண்டாம் என பரப்பப்பட்டு வரும் பரப்புரைகள் தான் என்றும் கூறப்படுகிறது.

சீனா ஆப்கள் வேண்டாம்

சீனா ஆப்கள் வேண்டாம்

இந்தியாவில் குறுகிய காலத்தில் மிக பிரபலமடைந்து வந்த ஆப் மூலம் நமது ஸ்மார்ட்போன்களில் உள்ள, இதன் மூலம் ஒரே கிளிக்கில் சீன ஆப்களை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக அந்தளவுக்கு சீனாவுக்கு எதிரான மக்களின் உணர்வு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது சமூக வலைதளங்களிலும், சீனா பொருட்கள் வேண்டாம் எனவும் பரப்பட்டு வருகிறது.

சீன ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு உண்டு

சீன ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு உண்டு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சீனா பொருட்கள் வேண்டாம் என பரப்பட்டு வந்தாலும், மேட் இன் இந்தியா பொருட்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் புரோமோட் செய்வதையும் இது தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் விற்பனையாளர்கள் இடிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இன்றும் சீனாவின் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு வரவேற்பு உள்ளது. ஆக சீனாவின் பொருட்களை மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.

சீனர்கள் நிதியுடன் ஒன்றி போயுள்ளனர்

சீனர்கள் நிதியுடன் ஒன்றி போயுள்ளனர்

அவர்கள் பணத்தின் மதிப்பினை கணக்கிடுகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நுகர்வோர் விவேகத்துடன் செலவழிப்பதில் கவனமுடன் இருக்கிறார்கள். எனினும் 10 வாடிக்கையாளர்களில் ஒருவர் சீனாவின் ஸ்மார்ட்போன் வேண்டாம் என்கிறார்கள். வாடிக்கையாளர்களின் வரவு செலவு திட்டங்களுக்கு ஏற்றவாறு பொருட்களை தேர்தெடுக்கிறார்கள். சீனர்கள் இதில் தான் ஒன்றி போயுள்ளனர்.

விற்பனை குறையாது

விற்பனை குறையாது

ஆக சீனா பொருட்களுக்கான தேவை குறையலாம் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் சில்லறை விற்பனையாளர் ஒருவர் கூறியதாக இடி செய்திகள் கூறுகின்றது. எனினும் நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தேவை குறைந்துள்ளது. இது சீனா மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் அரங்கேறி வரும் ஒரு சம்பவம் தான். ஸ்மார்ட்போன்கள் வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கிறது என்றால், சீனாவுடன் யார் தான் போட்டி போட முடியும்?

மக்கள் பொருட்கள் வாங்குவதில் எந்த மாற்றமுமில்லை

மக்கள் பொருட்கள் வாங்குவதில் எந்த மாற்றமுமில்லை

சீனாவில் முதன் முதலாக தோன்றிய இந்த கொடிய கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனால், சீனாவுக்கு எதிராக தூண்டப்பட்டது. ஏன் பல பிரபலங்கள் கூட சீனா பொருட்கள் வேண்டாம் என பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் ஈ-காமர்ஸ் நிறுவனங்களின் முக்கிய மூத்த அதிகாரிகள் மக்களின் பொருட்கள் வாங்குவதில் எந்த மாற்றத்தினையும் காணவில்லை. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் உள்நாட்டு பொருட்களையும் புரோமோட் செய்து வருகின்றன.

இந்திய பொருட்களுக்கு விளம்பரம்

இந்திய பொருட்களுக்கு விளம்பரம்

குறிப்பாக பிளிப்கார்ட் ரேமாண்ட், லிபாஸ், ஹைட்சைன் போன்ற பிராண்டுகளை ஊக்குவித்து வருகிறது. இதே போல் அமேசானில் உள்ளூர் மக்களுக்கான குரல் என்ற பிரிவு உள்ளது. இது சிறு வணிகங்கள் மற்றும் கைவினைஞர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை பட்டியலிடும்.

புறக்கணிப்பு இல்லை

புறக்கணிப்பு இல்லை

அதே போல கடந்த ஒரு மாதமாக நாங்கள் மிக நெருக்கமாக சந்தையை கண்கானித்து வருகிறோம். சீன பொருட்கள் வேண்டாம் என்ற புறக்கணிப்புகள் இல்லை என்றும் ஈ-காமர்ஸ் சந்தையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சீன பொருட்களுக்கு எதிராக போராட்டம்

சீன பொருட்களுக்கு எதிராக போராட்டம்

ஆனால் இதற்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஏதும் பதிலளிக்கவில்லை என்றும், இதே ஸ்னாப்டீலீன் செய்தித் தொடர்பாளர் தாங்கள் மேட் இன் இந்திய பொருட்களில் தான் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரம் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சங்கம், சீனாவில் தயாரிக்கப்பட்ட 3000 பொருட்களுக்கு எதிராக ஜூன் 10ல் நாடு தழுவிய போராட்டத்தில் குதிக்க உள்ளதாக இடி செய்திகள் கூறுகின்றன.

இப்படி ஒரு ஆப்சன் வேண்டும்

இப்படி ஒரு ஆப்சன் வேண்டும்

அதோடு எங்களிடம் 40,000 வர்த்தக சங்கங்கள் உள்ளன. 10,000 இறக்குமதியாளர்களை சீன தயாரிப்புகளை கொண்டு வர வேண்டாம் என கூறுவோம் என்று சிஏஐடி-யின் பொதுச் செயலாளர் காண்டேல்வால் கூறியுள்ளார். நிபுணர்களின் கூற்றுப்படி, அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் பிறந்த நாடுகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட சம்பவங்களும் உண்டு. இன்னும் சிலர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே காண்பிக்க ஒரு தேடல் ஆப்சனை கேட்டுள்ளனராம்.

எப்படியேங்க.. இந்திய வியாபாரிகளுக்கும், இந்திய உற்பத்தியாளர்களுக்கும், மக்களுக்கும் நல்லது நடந்தால் சரிதான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+