IPL 2026 மினி ஏலம் இன்று பிரம்மாண்டமாக அபுதாபியில் துவங்கிய நிலையில், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் அதிகபட்ச விலைக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.2 கோடிக்கு கேமரூன் கிரீன்-ஐ வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் நடந்த கடுமையான போட்டியில் KKR வெற்றி பெற்றது. கிரீன் வேகப் பந்துவீச்சு, மிடில் ஆர்டர் பேட்டிங், மேட்ச் ஃபினிஷர் திறன் என பல வகையில் திறன் கொண்டவர் என்பதால் அதிகப்படியான விலைக்கு ஏலத்தில் தேர்வாகியுள்ளார்.

சம்பளத்தில் செக்
BCCIயின் 'மேக்ஸிமம் ஃபீ ரூல்' படி வெளிநாட்டு வீரர்களின் ஊதியம் ரூ.18 கோடியாக உச்சவரம்பு வைக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ரூ.25 கோடி அல்லது அதற்கு மேல் விலை போனாலும், வெளிநாட்டு விளையாட்டு வீரருக்கு ரூ.18 கோடி மட்டுமே ஊதியமாக கிடைக்கும். மீதித் தொகை வீரர்கள் நலனுக்கான நிதிக்கு (Players' Welfare Fund) செல்லும் வகையில் விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விதி மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் அதிக விலை கோருவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச விலை (ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடி) அல்லது தற்போதைய ரிட்டென்ஷன் உச்சம் (ரூ.18 கோடி) ஆகியவற்றில் குறைந்த தொகையை அடிப்படையாகக் கொண்டு இந்த விதி செயல்படும்.
இதேவேளையில் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட தொகை முழுவதும் அணியின் பர்ஸில் இருந்து கழிக்கப்படும். உதாரணமாக KKR ரூ.25.2 கோடி செலுத்தியதால் அவர்களின் பர்ஸ்-ல் இருந்து மொத்த தொகையும் குறைக்கப்பசும். ஆனால் கிரீனுக்கு ரூ.18 கோடி மட்டுமே ஊதியமாக கிடைக்கும். மீதமுள்ள 7.2 கோடி Players' Welfare Fund-க்கு மாற்றப்படும்.
இந்த விதி இந்திய வீரர்களுக்கு பொருந்தாது. இது அணிகளின் நிதி திட்டமிடலுக்கு சவால் அளிக்கும் அதே வேளை, வீரர்கள் நலனுக்கு உதவும் என BCCI தெரிவித்துள்ளது.
இந்த விதி IPL ஏலத்தின் நிதி சமநிலையை பாதுகாக்க உதவுகிறது. இதேவேலையில் வெளிநாட்டு வீரர்கள் அதிக விலை கோரி மெகா ஏலத்தை தவிர்ப்பதையும் தடுக்கிறது.
IPL 2026 ஏலம் வெளிநாட்டு வீரர்களுக்கு ஊதிய உச்சவரம்பு விதித்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேமரூன் கிரீன் போன்ற வீரர்கள் உயர் விலை பெற்றாலும், ஊதியம் ரூ.18 கோடியாகவே இருக்கும் என்பது வெளிநாட்டு வீரர்களுக்கு பின்னடைவு தான்.


Click it and Unblock the Notifications