Camlin நிறுவனர் சுபாஷ் காலமானார்.. கேம்லின் உருவானது எப்போது தெரியுமா..?

மும்பை: ஸ்டேஷனரி தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் கேம்லின் ஃபைன் சயின்ஸ் நிறுவனர் மற்றும் kokuyo கேம்லின் நிறுவனத்தின் தலைவரான சுபாஷ் தண்டேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் திங்கள் கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.

இந்திய ஸ்டேஷனரி உற்பத்தித் துறையில் தனி இடத்தையும், தனி வாடிக்கையாளர் கூட்டத்தையும் ஆரம்பம் முதல் வைத்திருக்கும் கேம்லின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முழு முக்கிய காரணமானவர் சுபாஷ் தண்டேகர்.

Camlin நிறுவனர் சுபாஷ் காலமானார்.. கேம்லின் உருவானது எப்போது தெரியுமா..?

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம், ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.

1931 ஆம் ஆண்டு டி.பி.தண்டேகர் மற்றும் அவருடைய சகோதரர் ஜி.பி.தண்டேகர் ஆகியோர் இணைந்து கேம்லின் பிராண்டை துவங்கினர். இந்த 93 ஆண்டு பழமையான கேம்லின் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. இந்த நிலையில் 2011ல் ஜப்பான் Kokuyo சுமார் 51 சதவீத பங்குகளை வாங்கியது. தற்போது தண்டேகர் குடும்பத்தைச் சேர்ந்த சுபாஷ் தண்டேகர் தலைமையில் கேம்லின் இயங்கி வருகிறது.

சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மராத்திய தொழில் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிய சுபாஷ் தண்டேகர் அவர்களின் மறைவையொட்டி, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் "மாநிலம் ஒரு தாத்தாவை இழந்துவிட்டது" என்று கூறி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், "இவர் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றினார். தொழிலாளர்களுக்குக் கௌரவம் கிடைக்க வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தினார்," என்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.

சுபாஷ் தண்டேகர்-க்கு மகன் ஆஷிஷ், மகள் அனகா ஆகியோர் உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+