இந்தியாவில் 1970 இறுதியில், 1980கள் இந்தியா முழுவதும் அசத்திய ஒரு கோலா பிராண்ட் என்றால் அது கேம்பா கோலா தான், வெளிநாட்டு கோல் பிராண்டுகளான கோகோ கோலா, பெப்சி நாட்டை விட்டு வெளியேறிய காலத்தில் Campa Cola மற்றும் தம்ஸ்அப் ஆகிய இரு பிராண்டுகள் மிகப்பெரிய ஆதிக்கம் தெலுத்தியது.
ஆனால் 1990களில் மீண்டும் கோகோ கோலா, பெப்சி இந்தியாவுக்குள் நுழைந்த காரணத்தால் campa Cola மற்றும் தம்ஸ்அப் ஆகியவற்றின் புகழ் மற்றும் வர்த்தகம் மொத்தமாக சரிந்து. இந்த நிலையில் தம்ஸ்அப் சுவை வெளிநாட்டு கோலாவுக்கு சற்று மாறுப்பட்டு இருந்த நிலையில் கோகோ கோலா 1994 ஆம் ஆண்டில் தம்ஸ்அப் பிராண்டை மொத்தமாக 60 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
இந்த நிலையில் campa Cola தனித்துவிட்டப்பட்டது, 2022 வரையில் ஹிரியானாவில் சிறிய அளவிலான தயாரிப்பையும் வர்த்தகத்தையும் கொண்டு இயங்கி வந்தது. FMCG துறைக்குள் நுழைய முடிவு செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2022ல் சுமார் 22 கோடி ரூபாய்க்கு வாங்கி மார்ச் 9 ஆம் தேதி 3 சுவையில் campa Cola குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளது.
campa Cola உருவாக கதை தெரியுமா உங்களுக்கு...?
இந்திய குளிர்பான சந்தை
இந்திய குளிர்பான சந்தையில் முடி சூடா மன்னாக இருந்தது தான் Pure Drinks Group, இந்த நிறுவனம் தான் 1949 ஆம் ஆண்டில் கோகோ கோலா-வை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போது கோகோ கோலா-வின் மொத்த உற்பத்தி மற்றும் விற்பனையாளராக இருந்தது Pure Drinks Group தான்.
கோகோ கோலா, பெப்சி வெளியேற்றம்
இந்த நிலையில் 1977 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய பார்மூலா, வர்த்தக மாடல் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்த காரணத்தாலும், 60 சதவீத பங்குகளை இந்திய நிறுவனங்களுக்கு அளித்து உள்நாட்டு கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. இதனால் கோகோ கோலா, பெப்சி நாட்டை விட்டு வெளியேறியது.
Campa Cola மற்றும் தம்ஸ்அப்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி உருவானது தான் Campa Cola மற்றும் தம்ஸ்அப். இதில் Campa Cola-வை உருவாக்கியது Pure Drinks Group, தம்ஸ்அப்-ஐ உருவாக்கியது சவுகான் சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பார்லே கம்பெனி சோடா, லிம்கா, கோல்டு ஸ்பாட், தம்ஸ்அப் ஆகியவைற்றை உருவாக்கியது.
15 வருடம்
கோகோ கோலா, பெப்சி இல்லாத 15 வருடம் இவ்விரு நிறுவனங்களும் பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்தியது என்றால் மிகையில்லை. அதிலும் முக்கியமாக கோகோ கோலா சுவையை போலேவே Campa Cola இருக்கும் காரணத்தால் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.
Campa Cola விளபரம்
1977 ஆம் ஆண்டு Campa Cola "The Great Indian Taste" என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்து இந்தியர்கள் மத்தியில் இடம்பிடித்தது. அடுத்த சில வருடத்திலேயே ஆரஞ்ச் குளிர்பானத்தையும் அறிமுகம் செய்து அசத்தியது.
மும்பை, டெல்லி
1980களில் மும்பை, டெல்லியில் பாட்டில் தொழிற்சாலை வைத்து Campa பிராண்ட் கோலா மற்றும் ஆரஞ்ச் குளிர்பானத்தை தயாரித்து இந்தியா முழுவதும் விநியோகம் செய்து பெரிய அளவில் பிரபலமானது. இந்த நிலையில் 1990களில் இந்தியா தாராளமயமாக்கல் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டது.
ஹரியானா
இதன் மூலம் இந்தியாவை விட்டு வெளியேறிய கோகோ கோலா, பெப்சி திரும்பவும் வந்து வர்த்தகத்தை பிடித்தது. இந்திய சந்தையை பிடிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பல வேலைகளை செய்தது மறக்க முடியாது. இந்த போட்டியில் கேம்பா பிராண்ட் விற்பனை குறைந்தது, ஹரியானா மாநிலத்தில் சிறிய உற்பத்தி, சிறிய வர்த்தகம் என்ற நிலைக்கு வந்தது.
ரிலையன்ஸ் ரீடைல்
FMCG பிரிவில் ரிலையன்ஸ் ரீடைல் பிற முன்னணி நிறுவனங்களை போலவே சொந்தமாக பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு குளிர்பான துறையிலும் இறங்க முடிவு செய்தது. இதற்காக 1970களில் மற்றும் 1980களில் கொடி கட்டி பறந்த campa நிறுவனத்தை 22 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
மறுஅறிமுகம்
ரிலையன்ஸ் ரீடைல் கோடை கால விற்பனையை மையமாக வைத்து Campa Cola, Campa Lemon மற்றும் Campa Orange ஆகிய 3 சுவைகளில் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக 200 மில்லி, 500 மில்லி, 600 மில்லி, 1 லிட்டர் , 2 லிட்டர் பேகேஜ்-களில்
குளிர்பானங்களை அறிமுகம் செய்துள்ளது.
வெற்றி பெறுமா..?
இந்தியாவில் கோகோ கோலா, பெப்சி குளிர்பான துறையில் இமயம் போல் வளர்ந்திருக்கும் நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துணை உடன் கேம்பா பிராண்ட் மீண்டும் இந்திய மக்களை கவர்ந்து வர்த்தகத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications