பொதுவாக நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு என்றாலே அது, சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
வரும் செப்டம்பர் 21 அன்று கேம்ஸ் எனப்படும் கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் (computer age management services) பொது பங்கு வெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த பொது பங்கு வெளியீடனாது செப்டம்பர் 23 வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுப்பங்கு வெளியீடு மூலம் கேம்ஸ் நிறுவனம் 1.82 கோடி பங்குகளை விற்பனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முகமதிப்பு ஒரு பங்கிற்கு 10 ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது 1229 - 1230 ரூபாய் வரையில் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் அதிகபட்சமாக 13 லாட்களை வாங்கலாம். ஒரு லாட்டில் 12 பங்குகள் இருக்கும். அதாவது 14,760 ரூபாய் ஆகும். ஆக ஒரு நபருக்கு 1,91,880 ரூபாய் வரை ஒதுக்கலாம். இந்த பங்குகள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 28 அன்று மேற்கொள்ளப்படும் என்று கேம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேசிய பங்கு சந்தையின் துணை நிறுவனமான NSEIL கேம்ஸில் 37.48% பங்குகளை கொண்டுள்ளது. இதே ஹெச்டிஎஃப்சி 5.99% பங்குகளையும், ஹெச்டிஎஃப்சி வங்கி 3.33% பங்குகளையும் கொண்டுள்ளது. இதே ஹெச்டிஎஃப்சி டிரஸ்ட் 3.19% பங்குகளையும், ஃபேரிங் கேப்பிட்டல் இந்தியா 4% பங்குகளையும், ஆக்சிஸால் 1.94% பங்குகளையும், ஹார்மனி ரிவர் இன்வெஸ்ட்மென்டுக்கு சொந்தமான கிரேட் டெரெய்ன் 43.53% பங்குகளையும் வைத்துள்ளது.
இதே போல Chemcon Speciality Chemicals நிறுவனமும் செப்டம்பர் 21 அன்று அதன் ஆரம்ப பொதுபங்கு வழங்கலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. கெமிக்கல் உற்பத்தியாளரான இந்த நிறுவனம் 350 - 400 கோடி ரூபாய் வரை, இந்த பங்கு வெளியீடு மூலம் திரட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனம் 350 - 400 கோடி ரூபாய் நிதியினை திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயம் இந்த பங்கு வெளியீடுகளானது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications