AI தொழில்நுட்பத்தின் உச்சம்.. 3 நாளில் புது நிறுவனத்தையே உருவாக்கும் எலான் மஸ்க் டீம்.. ஒரு இந்தியரும் அடக்கம்

ஏஐ தொழில்நுட்பம் தினமும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வரும் வேளையில், அடுத்த அற்புத நிகழ்வாக எலான் மஸ்க்-ன் ஏஐ நிறுவனமான XAI (தற்போது ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது) ஒரு இந்தியர் உட்பட 3 பேர் இணைந்து லைவ் ஸ்ட்ரீமிங்-ல் 3 நாளில் ஒரு நிறுவனத்தை புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஐ ரேசில் ஆந்திரோபிக் மற்றும் ஓப்பன்ஏஐ தொடர்ந்து சீன நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு முன்னிலையில் இருந்து வரும் வேளையில் எலான் மஸ்க்-ன் Gork தளத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும், பயன்பாடும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

AI தொழில்நுட்பத்தின் உச்சம்.. 3 நாளில் புது நிறுவனத்தையே உருவாக்கும் எலான் மஸ்க் டீம்.. ஒரு இந்தியரும் அடக்கம்

கிராக் தளத்தின் திறனை காட்டவே இந்த 3 நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ்ஏஐ நடத்த உள்ளது.

மாட் பால்மர், லாரன் டான், ரோஷன் சதானனி ஆகிய 3 பேர் இணைந்து, க்ராக் AI தளத்தின் உதவியுடன் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பக்கட்டத்தில் இருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். இதை Grok Bot Galaxy என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிகழ்ச்சியாக செப்டம்பர் 15 முதல் 17 ஆம் தேதி வரையிஸ் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற உள்ளது.

இந்த 3 பேர் கொண்ட குழு இந்த 3 நாளில் பிஸ்னஸ் பிலான் உருவாக்குவதில் துவங்கி இன்ஜினியரிங், மார்கெட்டிங் வரை ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளை இந்தக் 3 பேர் கொண்ட குழு ஏஐ உதவியுடன் மேற்கொள்ளும். இதன் மூலம் ஏஐ உலகத்திற்கு க்ராக் தளம் எந்தளவுக்கு திறன்வாய்ந்தாக உள்ளது என்பதை காட்ட உள்ளது XAI நிறுவனம்.

மேலும் இந்த சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிகழ்ச்சி இந்த 3 நாட்களில் தினமும் காலை 8:30 முதல் மாலை 6 மணி வரை 3 பேர் செய்யும் பணிகள் அனைத்தும் லைவில் ஒளிபரப்பப்படும்.

இந்த புதுமையான முயற்சியில் Grok Bot வெறும் AI Team Member ஆக மட்டும் அல்லாமல் 4வது நபராகவும், 3 பேருக்கும் அசிஸ்டென்ட் ஊழியர் போலவும் செயல்பட உள்ளது. இந்த 3 நாள் திட்டம் குறித்து எலான் மஸ்க் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் Cool எனவும் பாராட்டியுள்ளார்.

தற்போது பெரும்பாலன நிறுவனத்தில் ஏஐ பாட் அல்லது ஏஐ ஏஜெண்ட் முக்கிய பங்காற்ற துவங்கியுள்ளது. இதன் பயன்பாட்டு காரணத்தால் பெரும்பாலான பணிகள் மிகவும் வேகமாக செய்வது மட்டும் அல்லாமல் செலவுகளையும் குறைக்கிறது.

உதாரணமாக விப்ரோ நிறுவனத்தில் சுமார் 20000 ஊழியர்களுக்கு இணையான ஒரு ஏஐ ஏஜெண்ட்களை பயன்படுத்த துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் ஒரு மனித ஊழியர்களுக்கு இணையாக ஏஐ ஏஜெண்ட்கள் 3.1 மடங்கு இணையான பணிகளை செய்யும் அளவுக்கு ஆட்டோமேஷன் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+