சென்னை: முதலீடு செய்வதில் இரண்டு முக்கியமான மந்திரங்கள் உள்ளன. அவை சிறந்த மற்றும் சரியான முதலீட்டை தேர்ந்தெடுப்பது மற்றும் இரண்டாவது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது. இதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை பெற்று அதிக வருமானத்தை அடைய முடியும். அதன் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் மொத்த தொகையாக முதலீடு செய்யலாம் அல்லது SIP (Systematic Investment Plan) என்ற முறையில் முதலீடு செய்யலாம். SIP திட்டம் முதலீட்டாளர்களை சிறிய தொகையில் இருந்து முதலீடு செய்வதை அனுமதிக்கிறது. மேலும் ஸ்டெப்-அப் SIP-கள் மூலம் வருடா வருடம் உங்களுடைய முதலீட்டு தொகையை குறிப்பிட்ட சதவீதமாக அதிகரிக்கலாம். இதனால் கூட்டு வட்டி வருமானத்தை நீங்கள் பெற முடியும்.

HSBC மிட் கேப் ஃபண்ட்: HSBC மிட் கேப் ஃபண்ட் என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், ஆகஸ்ட் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து சிறந்த வருமானத்தை அளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 19.42% வருமானத்தையும் மற்றும் மொத்த வருமான அடிப்படையில் 3280% வருமானத்தை அளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் திட்டத்தில் ஒருவர் மொத்தமாக ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், தற்போது ரூ.34 லட்சம் பெற்றிருப்பார். இந்த ஃபண்டில் மாதாந்திர SIP முதலீடாக ரூ. 10,000 முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு ரூ 1.82 கோடி கிடைத்திருக்கும்.
கடந்த 1 ஆண்டில், இந்த HSBC மிட் கேப் ஃபண்ட், ரூ. 10,000 முதலீட்டை, ரூ. 1, 54,000ஆக மாற்றியுள்ளது. அதன்படி 54 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. அதேபோல இந்தத் திட்டத்தில் 2 வருடம் ஒருவர் முதலீடு செய்திருந்தால் 33 சதவீத வருமானத்தை பெற்றிருப்பார். அதாவது ஒருவர் ரூ. 10,000 SIP முதலீடு செய்திருந்தார் என்றால் ரூ. 3,50,000ஆக அது மாறி இருக்கும். அதே போல 3 வருட, SIP முதலீட்டிற்கு 22 சதவீத வருடாந்திர வருமானம் அளித்துள்ளது. அதன்படி ரூ. 10,000 முதலீட்டிற்கு ஒருவர் ரூ. 5.5 லட்சம் பெற்றிருப்பார்.
HSBC மிட் கேப் ஃபண்ட் வளர்ச்சி: இந்த ஃபண்டின் கீழ் உள்ள சொத்து மதிப்பு (AUM) 10,342 கோடி மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் 20% வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. HSBC மிட்கேப் ஃபண்டின் குறைந்தபட்ச முதலீடு ரூ 5,000 மற்றும் குறைந்தபட்ச SIP முதலீடு ரூ 500 ஆகும்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்தவர்கள் தற்போது அதிக லாபத்தை பெற்றிருப்பார்கள்.
மேலும் ஒரு பண்டின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ் வைத்து, இனிவரும் காலங்களில் அவை திறம்பட செயல்படும் என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஃபண்ட் திறம்பட செயல்பட்டுள்ளது என்பதை விவரிக்கவே. இதன் மூலம் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவு எடுக்க சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு முதலீட்டு முடிவு எடுப்பதற்கு முன்பும் ஆராய்ந்து உங்கள் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று சுய விருப்பத்துடன் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications