இந்திய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியினை வழங்குகின்றன. சம்பளதாரர்கள் அவசர காலங்களில் நிதித் தேகையின் போது இதனை பயன்படுத்த முடியும்.
ஒவர் டிராஃப்ட் வசதி உண்மையில் குறுகிய கால கடன் வழங்கும் வசதியை போலவே செயல்படுகிறது.
இது வாடிக்கையாளர்கள் அவசர கால சிக்கல்களை எதிகொள்ள பயனுள்ளதாக இருக்கும் எனலாம். இதனை இன்றைய காலத்தில் பல்வேறு வங்கிகளும் வழங்குகின்றன. எனினும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
சம்பளத்தில் 3 மடங்கு கடன்
வங்கியின் வாடிக்கையாளார்கள் தேவைப்படும் நேரங்களில் வங்கி சேவையின் மூலம் அவர்களது சம்பளத்தில் மூன்று மடங்கு வரையில் முன் பணமாக பெறலாம். சில சமயங்களில் சம்பளத்தின் ஒரு பகுதியினை மட்டுமே கடனாக பெற முடியும். அதுவும் சம்பளதாரர்கள் சம்பள கணக்கு வைத்திருக்கும் சம்பள கணக்குதாரர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள்.
ஓவர் டிராப்ட் வசதி
இதற்கு முன்னதாக சிபில் ஸ்கோரினையும் வங்கிகள் சரி பார்க்கும். இதில் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளே உடனடியாக தனி நபர் கடன் கொடுக்கின்றன. எனினும் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஓவர்டிராப்ட் வசதியினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வட்டியும் குறைவு. விரைவில் பெறலாம். சம்பளத்தின் அடிப்படையிலும் இந்த கடன் பெறலாம்.
தங்க கடன் மூலம் ஓவர் டிராப்ட்
சொல்லப்போனால் தங்க கடனை போல் தான் இதுவும். நகைக்கடனில் நகையை பிணையமாக வைத்துக் கொண்டு கடன் கொடுப்பார்கள். ஓவர்டிராப்டில் உங்களிடம் உள்ள சேமிப்புகளை பிணையமாக வைத்துக் கொண்டு கடன் கொடுப்பார்கள்.
எப்படி பெறுவது?
பொதுவாக இந்த ஓவர் டிராப்ட் வசதியினை பெற வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைனிலேயே பெறலாம். இதில் செயல்பாட்டு கட்டணமும் சற்று குறைவாகவே இருக்கும். பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே இது குறித்து கூறியிருக்கலாம். சில வங்கிகள் தெரியப்படுத்தாமலும் கூட இருக்கலாம்.
பிக்சட் டெபாசிட் மீதான ஓவர்டிராப்ட்
பொதுவாக பிக்சட் டெபாசிட் மீதான ஓவர் டிராப்டில் 75% வரையில் கடனாக பெறலாம். இந்த வகையான கடன்களுக்கு வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தினை காட்டிலும் 2% வரையில் அதிகமாக விதிக்கின்றன. இதில் உங்களது பிக்சட் டெபாசிட் தொகையானது பிணையமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சம்பளத்தின் மீதான ஓவர்டிராப்ட்
இதில் பல வகையான ஓவர்டிராப்ட் வசதிகள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையை பொறுத்து கிடைக்கும். இது உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது.
மாத சம்பளதாரர் எனில் உங்களது சம்பளத்திற்கு எதிராக கிடைக்கும். இது உங்களது சம்பளத்தில் 2 - 3 மடங்கு கிடைக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். இது ஷார்ட் டெர்ம் லோன் எனலாம். இதனை உங்களது சம்பள கணக்கு உள்ள வங்கிகளில் பெறலாம்.
இன்சூரன்ஸ் Vs முதலீடு
இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் பாலிசிகளை பிணையமாக வைத்தும் ஒவர்டிராப்ட் வசதியினை பெற்றுக் கொள்ளலாம். பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். முதலீட்டுக்கு முதலீடாகவும், இந்த முதலீடும் ஒரு புறம் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கும். கடனை சரியாக நேரத்தில் செலுத்தி விடும்பட்சத்தில் லாபத்திற்கு லாபமும் கிடைக்கும். கடனும் கிடைக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications