உலகத்தின் தொழிற்சாலையாக சீனா மட்டும் தான் இருக்கணுமா? அந்த சிம்மாசனத்தை இந்தியா எட்டிப் பிடிக்கிற நேரம் வந்தாச்சுனு நம்ம எல்லாரும் நம்பிக்கிட்டு இருக்கிறோம். இந்த சூழலில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் 2026ல், எந்த மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் உற்பத்தி துறைக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேக் இன் இந்தியா மூலமாக இந்தியா கொடுத்த கம்-பேக் இப்போ ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் மின்னணு பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் துறையில், நாம உலகையே திரும்பி பார்க்க வச்சாலும், இன்னொரு பக்கம் சீனாவுடைய ஆதிக்கம் ஒரு நிழல் மாதிரி நமக்கு பின்னாடியே வந்துட்டு இருக்கு. ஏன் இது ஒரு அல்டிமேட் டெஸ்ட்? வெறும் அசெம்பிளி மட்டும் பண்ணுனா பத்தாது, இந்தியாவிலேயே உதிரிபாகங்களையும் தயாரிக்கணும்ங்கிறது தான் இப்போதைய சவால். பி.எல்.ஐ திட்டத்தில் புது புது செக்டார்கள் வருமா? எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களுக்கு கடன் சுமை குறையுமா? எல்லாவற்றுக்கும் மேல், சீனப் பொருட்களோட விலைப் போட்டியை நாம எப்படி சமாளிக்கப் போறோம்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில இருக்கிற அந்த சிவப்புப் பை, இந்தியாவை ஒரு குளோபல் மேனுபேக்ச்சரிங் ஹப்-ஆ மாத்துமா இல்லையா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
பல சவால்கள்?
பாலிவுட் படங்களில் ஒரு ஹீரோவின் கதை எப்படி இருக்குமோ, அதே போன்ற ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை இந்திய உற்பத்தி துறை சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்டது, பிறகு ஒரு சிறிய இடைவெளி, இப்போது ஒரு வலிமையான நோக்கத்தோடு அதிரடி மீள்வருகை. பல ஆண்டுகளாக சேவை துறையின் நிழலில் மறைந்திருந்த உற்பத்தித் துறை, 2020-ல் மோடி 2.0 அரசாங்கம் கொண்டு வந்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (PLI) திட்டம் மூலம் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்கள் எனப் பல சவால்கள் இப்போது குறுக்கே வந்து நிற்கின்றன. இந்த சூழலில் தான் நிர்மலா சீதாராமனின் 2026 பட்ஜெட் தான், இந்த இந்திய தொழிற்சாலைகளின் கதை ஹிட் ஆகுமா அல்லது இடைவேளைக்கு முன்பே முடிந்துவிடுமா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
முன்னேற்றமும் முட்டுக்கட்டைகளும்
மேக் இன் இந்தியா வெறும் முழக்கமாக இல்லாமல், ஒரு உண்மையான கொள்கையாக மாறியுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) உற்பத்தித் துறை 17% பங்களிக்கிறது. எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் ஆட்டோமொபைல், பசுமை எனர்ஜி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் குவிந்துள்ளன. இதனிடையே செல்போன் ஏற்றுமதி மட்டும், சமீபத்திய ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடான அமெரிக்கா, சில பொருட்களுக்கு 50% வரை வரி விதித்துள்ளது. இது இந்திய தொழிற்சாலைகளுக்கு ஒரு நேரடி எச்சரிக்கை மணி எனலாம்.
அரசின் கவனம்?
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் உற்பத்தி துறையில் அரசு நடப்பு ஆண்டில் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பி எல் ஐ திட்டத்தை மேலும் வலுப்படுத்தலாம். குறிப்பாக எந்தெந்த துறைகளில் இந்தியா கவனம் செலுத்த முடியுமோ, அந்தந்த துறைகளில் அதிக கவனம் செலுத்தலாம். குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தலாம். இந்தியாவில் தயாரித்த பொருட்களை, அதை வேகமாகவும், மலிவாகவும் உலகச் சந்தைக்கு கொண்டு செல்ல சரக்கு போக்குவரத்தை எளிதாக்கலாம். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ்-ஐ பிஎம் கதி சக்தி திட்டத்தின் கீழ், காகித வேலைகளை குறைத்து டிஜிட்டல் முறையில் ஏற்றுமதி- இறக்குமதி அனுமதிகளை விரைவுபடுத்த திட்டமிடலாம்.
குறிப்பாக இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானது. அதில் தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு, முன்னணியில் உள்ளது. 2025 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் தமிழ்நாடு $12.62 பில்லியன் மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் சுமார் 37% பங்களிப்பை தமிழ்நாடு மட்டுமே வழங்குகிறது. அதாவது, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 3 மின்னணு பொருட்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருந்து உருவானது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அரசின் ஊக்கமே காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு குறிப்பாக நில வசதிகள், தடையில்லா மின்சாரம், தண்ணீர் மற்றும் இணைய வசதி, தொழிற்சாலைகளுக்கு தேவையான வேலையாட்கள் என அனைத்தையும் உருவாக்கி தந்துள்ளன.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் அந்த ஆர்வத்தை முதலீடாக மாற்றுகிறார்களா என்பதுதான் பெரிய கேள்வி. ஏனெனில் வெளி நாட்டு நிறுவனங்கள் இங்கு தொடங்க பல சவால்கள் இருந்து வருகிறது. இதை மாற்ற, பட்ஜெட்டில் நடைமுறையில் உள்ள சிக்கல்களை குறைக்க அறிவிப்புகள் வெளியாகலாம்.இது மட்டுமல்ல, உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகள் உள்பட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்று பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications