SBI Cyberattack: திருடப்பட்ட தரவுகள் வைத்து உங்க பெயரில் கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்க முடியுமா..?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வில் இருக்கும் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிநபர் விபரங்கள் சைபர் தாக்குதல் நடத்தி திருடப்பட்டு இருக்கும் வேளையில், எஸ்பிஐ வங்கி ஆரம்பக்கட்ட ஆய்வில் வெறும் 3,897 வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. உண்மையான பாதிப்பு முழுமையான ஆய்வுகள் முடிந்த பின்பு தான் தெரிய வரும்.

இந்த நிலையில் சாமானிய மக்களிடம் தற்போது இருக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் திருடப்பட்ட தரவுகள் வைத்து மற்றவர்களின் பெயரில் கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்க முடியுமா..? என்பது தான்.

SBI Cyberattack: திருடப்பட்ட தரவுகள் வைத்து உங்க பெயரில் கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்க முடியுமா..?

ஏனெனில் இந்த ஹேக்கர் குழு எஸ்பிஐ வங்கி தளத்தில் இருந்து வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண், பிறந்த தேதி, பெயர், பாலினம், ஈமெயில், வீட்டு முகவரி ஆகிய விபரங்கள் கசிந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வங்கி கிளை விபரம், வாடிக்கையாளர் தகவல் ஆவண குறியீடுகள், லீட் ஐடி, கடன் குறித்த மெட்டாடேட்டா போன்ற தகவல்களும் திருடப்பட்டு உள்ளதாக எஸ்பிஐ நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான தகவல் வைத்து ஒருவர் பெயரில் போலியாக கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்கி பணத்தைத் திருட முடியுமா..? அப்படி நடந்துள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..? இத்தகைய மோசடியை எப்படி முறையாகப் புகார் அளித்துச் சரி செய்வது..?

தற்போது திருடப்பட்ட தரவுகள் வைத்து போலியாகக் கடன்களை வங்கிகளிலும், நிதி நிறுவனத்திலும் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தனிநபர் தகவல்கள், கடன் விண்ணப்ப தரவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி போலியான அடையாளத்தைக் கொண்டு மோசடிகளைச் செய்யும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக குமார் என்ற நபரின் எஸ்பிஐ வங்கி தரவுகள் தொடர்பான விபரங்கள் இந்த சைபர் அட்டாக் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது என வைத்துக்கொள்வோம்.

இந்த திருடப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு மோசடி செய்யும் நபர் வங்கி அதிகாரி போல் குமார் அவர்களுக்கு போன் கால் செய்து கடன் குறித்த கூடுதல் விபரத்தைப் பெற்று மோசடி செய்யலாம் அல்லது குமாரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு வெரிபிகேஷன் முறையில் மாற்றம் செய்து கடன் வாங்குவது, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது போன்ற மோசடி பணிகளைச் செய்யலாம்.

இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் முதலில் எந்த லோனுக்காக எந்த வங்கியில் விண்ணப்பம் செய்தோம், எந்த வங்கிகள் எத்தனை கடன்கள், எவ்வளவு கடன் வைத்துள்ளோம் என்பதையும் சரியான நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல் வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு போன்ற அனைத்து நிதி தொடர்பான விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனால் போலியாக மோசடி அழைப்புகளை எளிதாக களைந்துவிட முடியும்.

முக்கியமாக வங்கி அதிகாரிகள் பெயரில் யாரேனும் அழைத்தால் OTP, பாஸ்வோர்டு தொடர்பான எவ்விதமான தகவல்களையும் அளிக்க வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+