தேசிய ஓய்வூதிய அமைப்பு: தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வு காலத்தில் ஒருவருக்கு தேவையான வருமானத்தை ஏற்படுத்தி தரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தினை பயன்படுத்தி ஓய்வு காலத்தில் பாதுகாப்பான வருமானத்தைப் பெற முடியும். பணியாளர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களது ஓய்வு காலங்களில், வருமானம் நின்று போகும் காலத்தை நல்ல விதமாக கழிப்பதற்கு இந்தத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த பதிவில் என்பிஎஸ் திட்டத்தை பயன்படுத்தி ரூ. 1 லட்சம் மாதாந்திர வருமானத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து பார்ப்போம்.
தேசிய ஓய்வூதிய திட்ட முதலீட்டின் மூலம் மாதம் 1 லட்சம் ஓய்வூதியத்தை யார் பெற முடியும்?: இந்த திட்டத்திற்கு 25 வயது அல்லது அதற்கும் குறைவான முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கும் முதலீட்டாளர்கள் 60 வயதில் மாதம் ரூ. 1 லட்சம் ஓய்வூதியத்தைப் பெறலாம். நீங்கள் முதலீடு செய்யும் தொகை, வருடங்களின் எண்ணிக்கை, உங்கள் வயது, உங்கள் முதலீட்டைத் தொடங்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து என்பிஎஸ் திட்டத்திலிருந்து வருமானம் கிடைக்கும்.

ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் பெற, முதலீட்டாளர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
என்பிஎஸ் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 1 லட்சம் ரூபாய் வருமானத்தை உருவாக்க குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள், உங்களது 25வது வயதில் இந்த முதலீட்டை தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலும், இந்த முதலீட்டு காலகட்டத்திற்கு முழுவதும் வருடாந்திர சராசரி வருமானமாக 8% (இந்த விகிதம் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது) கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் தனது 25வது வயது முதல், இந்த NPS முதலீட்டை செய்து கொண்டே வருகிறார் என்றால், அவரது 60வது வயதில் மூதலீடு முற்று பெரும். மொத்தம் 35 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
இதற்காக மாதம் மாதம் முதலீடாக ரூ. 8,150 செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் மொத்தமான முதலீட்டுத் தொகையாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 4,23,000 இருக்கும். இப்பொழுது உங்களுடைய மொத்த கார்பஸ் ரூ. 1,88,19,777 ரூபாயாக இருக்கும், மற்றும் மொத்த லாபம் ரூ. 1,53,96,777 இருக்கும்.
இதனைப் பெற நீங்கள் மேற்கண்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாத தவணையாக ரூ. 8,150 ரூபாயை, உங்களின் 25 முதல் 60 வயது வரை முதலீடு செய்யும் போது, இந்த லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. மேலும் நீங்கள் எதிர்பார்க்கப்படும் வருமானத்திற்கு 8 % சதவீத ரிட்டர்ன் இருக்கும் பட்சத்தில் இந்த மாத வருமானமான ரூ. 1 லட்சம் சாத்தியமே.


Click it and Unblock the Notifications