அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் இறக்குமதி வரியை அதிகரித்து பெரிய அளவிலான வர்த்தக போரை தொடங்கி இருக்கிறார். ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரியை விதிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது.
வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடுகள் மீது 25 சதவீத வரி கூடுதலாக விதிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தியா அதிக அளவில் வெனிசிலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடிய ஒரு நாடு . 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 22 மில்லியன் பேரல்கள் எண்ணெயை இறக்குமதி செய்து பயன்படுத்தி இருக்கிறது.

டிரம்பின் இந்த அறிவிப்பால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்து அதனை சுத்திகரித்து விற்பனை செய்வது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். மேலும் எண்ணெய் கொள்முதலுக்கு அவர்கள் கூடுதல் செலவினை செய்ய வேண்டி இருக்கும். இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மந்த நிலைக்கு சென்றால் சர்வதேச பொருளாதாரமும் அதனால் பாதிக்கப்படும் ஆனால் சர்வதேச தரகு நிறுவனமான பென்ஸ்டைன் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றால் அது இந்திய பொருளாதரத்திற்கு பாசிட்டிவாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளது. டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எடுத்து வரக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் தற்போது பெரிய சிக்கலை சந்தித்து இருக்கிறது.
பல்வேறு முதலீட்டாளர்களும் அமெரிக்க பங்குச்சந்தையில் தங்களுடைய பங்குகளை பெரிய அளவில் விற்பனை செய்து வருவதால் ,அமெரிக்க பொருளாதாரம் குறித்த அச்சம் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனங்கள் நடத்திய ஆய்வு அடுத்த 12 மாதங்களுக்குள் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு 43 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது உள்ளிட்டவை காரணமாக அமெரிக்க பொருளாதார, ஸ்திரமற்ற நிலைக்கு செல்ல கூடும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நாடுகள் மீதும் போட்டி வரிகளை விதித்து வருவது இந்த பொருளாதார ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெர்ன்ஸ்டைன் நிறுவனம் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் லாபம் காண முடியும் எனக்கூறி இருக்கிறது. இந்தியாவின் மேக்ரோ பொருளாதாரம் ஏற்கனவே மீண்டு வந்து விட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை குறிப்பிடுகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, உலக பொருளாதார சங்கிலியுடன் பெரிய அளவில் தொடர்பில் இல்லாமல் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது என்ற கருத்தையும் அந்த நிறுவனம் முன் வைத்திருக்கிறது.
இந்திய ஈக்விட்டி சந்தைகள் குறித்த ஒரு பாசிட்டிவான பார்வையை இந்த தரகு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரலாற்று ரீதியாக பார்க்கும் போது அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும்போது எல்லாம் இந்திய பொருளாதாரம் அதனால் பெரிய பாதிப்பை சந்திக்கவில்லை என இந்த நிறுவனம் கூறுகிறது. அதாவது அமெரிக்க பொருளாதாரம் சரிவில் இருந்த போதெல்லாம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியில் தான் இருந்திருக்கிறது என தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டாலும் இந்திய பொருளாதாரம் தன்னுடைய வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டது என தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருக்க வில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, ஐடி சேவைகள், நகை மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றாலும் அமெரிக்க பொருளாதார மந்த நிலை, டிரம்பின் வரி உயர்வு நடவடிக்கை ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறியுள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து பெருமளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்றுக் கொண்டு வெளியேறியதால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் தற்போது பங்குச்சந்தை மீண்டு வருவதற்கான பாதைக்கு திரும்பி விட்டது என குறிப்பிடுகிறது. அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரை 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய பங்குச் சந்தை திருத்தத்திலிருந்து தற்போது மீண்டு வருகிறது என்பதை பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும்போது இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுவடைய தொடங்கும் என்றும் இதனால் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்றும் கூறியுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் தன்னுடைய வரலாற்று உச்சத்திலிருந்து 10 சதவீதம் வரை சரிவடைந்து திருத்தம் அடைந்து இருக்கின்றன. குறிப்பாக ஐடி மற்றும் வாகனத்துறை பங்குகள் 20 சதவீதம் வரை சரிவடைந்துவிட்டன. தற்போது இவை அனைத்தும் மீண்டும் வர தொடங்கி இருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கிறது. இவை அனைத்துமே இந்திய பொருளாதாரம் பாசிட்டிவான நிலையில் வளர இருக்கிறது என்பதற்கான சான்று என பென்ஸ்டைன் நிறுவனம் குறிப்பிடுகிறது.
அமெரிக்க அரசு இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவதாக எச்சரித்துள்ள நிலையில் பெரிய அளவில் இது இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்த நிறுவனம் கூறுகிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி வரி எச்சரிக்கைகள் மூலம் இந்தியா சுயசார்பு தன்மை கொண்டதாக மாறுவதற்கான ஒரு வாய்ப்பை தான் ஏற்படுத்தித் தருகிறது என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கூறுகிறது.
இந்தியா தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதற்கான பாதையை இது உருவாக்கி தருகிறது என கூறி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்தியா மற்ற நாடுகளோடு தன்னுடைய வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா சுயசார்பு என்ற இலக்கை நோக்கி பயனிக்கும் நிலையில் இந்த காலகட்டத்தை அதற்கேற்ற வகையில் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications