இலங்கையை இந்தியா கைபற்ற முடியுமா.. இது சாத்தியமானதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கும் அலைமோதி வருவதை காண முடிகிறது. இதனால் கொதித்தெழுந்த மக்கL அதிபர் மாளிகையை தங்கம் வசம் கொண்டு வந்தனர்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

3 பக்கமும் அடிவாங்கும் கிரிப்டோகரன்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!3 பக்கமும் அடிவாங்கும் கிரிப்டோகரன்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இதற்கிடையில் அதிபர் மாளிகையை அடுத்து பிரதமர் அலுவலத்தினையும் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அவசர நிலை பிரகடனம்

அவசர நிலை பிரகடனம்

இந்த அவசர நிலை பிரகடனத்தின் பdi, ராணுவம், போலீசாருக்கு கூடுதல் அதிகாரம், மக்கள் ஓன்று கூடி போராட்டம் நடத்தவும் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இது மக்கள் மத்தியில் இன்னும் கோபத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கையில் இன்னும் நிலைமை மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியா மட்டுமே உதவி

இந்தியா மட்டுமே உதவி

இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இலங்கைக்கு இந்தியா மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே உதவி செய்து வருகின்றது. சீனாவோ, சர்வதேச நாணய நிதியமோ, உலக வங்கியோ அல்லது வேறு எந்த நாடும் உதவிக்கு முன் வரவில்லை.

அதேசமயம் இலங்கைக்கு இந்திய அரசு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், அண்டை நாடு என்ற முறையில் உதவ முயற்சி செய்வதாகவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.

 

 இலங்கை VS இந்தியா Vs கடன்

இலங்கை VS இந்தியா Vs கடன்

இதற்கிடையில் ஓரு தரப்பு இலங்கையை இந்திய கைபற்ற முடியுமா என்ற கேள்வியும் எழப்பியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருந்து வரும் இலங்கை, சமீபத்தில் அதன் 51 பில்லியன் டாலர் வெளி நாட்டு கடனை செலுத்த முடியாததாக அறிவித்தது. இதில் உள்நாட்டு நிலவரம் எதுவும் சேர்க்கப்படவில்லை.

இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் விகிதமானது மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 47.1 பில்லியன் டாலர் அதிகரித்து, 620.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இலங்கையோடு ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் 6 மடங்கிற்கும் மேலாக அதிகம் எனலாம்.

 

இந்தியா: இலங்கை VS மக்கள்

இந்தியா: இலங்கை VS மக்கள்

UN அறிக்கையின் படி இந்தியாவின் மக்கள் தொகை நடப்பு ஆண்டில் 1.412 பில்லியன் டாலராகும். அதேசமயம் இலங்கையின் மக்கள் தொகை சுமார் 21,594,657 பேராகும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை மக்கள் தொகை என்பது மிகச் சிறியதே.

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்தாண்டின் இறுதியில் சீனாவினை விட அதிகரிக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு ஆயவறிக்கைகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

கையிருப்பு எவ்வளவு?

கையிருப்பு எவ்வளவு?


ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி கையிருப்பு 2019ம் ஆண்டில் 7.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அது படிப்படியாக குறைந்த வண்ணமே உள்ளது. இது கடந்த 2020ல் 5.7 பில்லியன் டாலராகும். இதே 2021ல் 3.1 பில்லியன் டாலராகவும், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கால கலட்டத்தில் வெறும் 1.9 பில்லியன் டாலராகவும் மட்டுமே இருந்துள்ளது. இது தற்போது இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஆர்பிஐ தரவின் படி இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்பு ஜூன் 19வுடன் முடிவடைந்த வாரத்தில் 5.9 பில்லியன் டாலர் குறைந்து, 590.59 பில்லியன் டாலராக உள்ளது.

 

எல்லாத் தகுதியும் உண்டு

எல்லாத் தகுதியும் உண்டு

இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் மடங்கு அதிகம் இருந்தாலும், அன்னிய கையிருப்பும் அதிகளவில் உள்ளது. அதோடு இலங்கையின் மக்கள் தொகையையும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவால் கைபற்றுவதில் ஏதும் சிரமம் இருக்காது. எனினும் இன்று வரையில் இலங்கை அண்டை நாடு என்ற முறையில் தான் உதவி வருவதாக கூறியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

can india take over sri lanka:Is this possible?

can india take over sri lanka:Is this possible?/இலங்கையை இந்தியா கைபற்ற முடியுமா.. இது சாத்தியமானதா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X