Zoho ஸ்ரீதர் வேம்பு: மின்சார கட்டணம் 60% உயரப் போகுதா? அரசனை (AI) நம்பி புருஷனை கைவிட்ட கதையாகுதா?

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ஏஐ பற்றி தான் பேசி வருகிறார்கள் . இந்த ஏஐ தொழில்நுட்பம் வருகை இந்தியாவில் குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய சவாலை கொண்டு வர இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கான டேட்டா சென்டர்களின் தேவை அதிகரிக்கிறது. 24 மணி நேரமும் ஏஐ பயன்படுத்த வேண்டும் என்றால் 24 மணி நேரமும் இந்த டேட்டா சென்டர்கள் இயங்க வேண்டும். இந்த டேட்டா சென்டர்கள் இயங்குவதற்கு பெரிய அளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது.

மின்சார கட்டணம் 60% உயரப் போகுதா? Zoho ஸ்ரீதர் வேம்பு டிவிட்டால் பரபரப்பு..!

இதனை சுட்டிக்காட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இது இந்தியாவுக்கு பெரிய சிக்கல் என கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியை சேர்ந்த ஒருவர் கூடிய ஒரு பதிவை குறிப்பிட்டு ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் இந்த மின்சார சேவை குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் ஏதென்ஸ் என்ற இடத்தில் வசிக்கும் நபர் என்னுடைய மின்சார கட்டணம் 2023 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 60 சதவீதம் உயர்ந்து விட்டது . கடந்த 24 மாதங்களில் மட்டும் ஆறு முறை மின்சார கட்டணம் உயர்ந்திருக்கிறது என கூறியுள்ளார். கூடிய விரைவில் இருபதுக்கும் அதிகமான டேட்டா மையங்கள் எங்கள் பகுதியில் கட்டப்பட இருக்கின்றன இதனால் நமக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா 99% மக்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது என கூறியிருக்கிறார் .

டேட்டா மையங்கள் இயங்க அதிக மின்சாரம் தேவை எனவே மின்சாரத்திற்கான டிமாண்டும் விலையும் அதிகரித்துள்ளது என்பதே இவர் கூறும் தகவல். இந்த பதிவினை சுட்டிக்காட்டி இருக்கும் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கக்கூடிய ஏதென்ஸ் பகுதியில் புதிய ஏஐ டேட்டா சென்டர்களுக்கான மின்சார தேவை அதிகரித்ததால் அந்த பகுதியில் மின்சார கட்டணம் 60% உயர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இது நடந்திருக்கிறது என கூறியிருக்கிறார் .

நாம் அனைவருமே தற்போது ஏஐதொழில்நுட்பம் பற்றி பேசி வருகிறோம் ஆனால் அதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்ற ஒரு விஷயத்தை நான் பேசாமலேயே இருக்கிறோம் என கூறியிருக்கிறார் . இந்தியாவிற்கு இது ஒரு பெரிய பிரச்சனை என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் அனைத்து ஜிபியுக்களையும் நம்மால் வாங்க முடிந்தாலும் அதற்கான மின்சாரத்தை வழங்க முடியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஏஐ தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக நம்முடைய வீடுகளையும் தொழிற்சாலைகளையும் கைவிட்டு விட முடியாது என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஏஐ தொடர்பான அடிப்படை குறித்தே நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தற்போது 1.2 கிகாவாட் திறன் கொண்ட டேட்டா மையங்கள் இருக்கின்றன 2030 ஆம் ஆண்டுக்குள் 5 கிகாவாட் திறன் கொண்ட டேட்டா மையங்களாக மாறும். ஏற்கனவே இந்தியாவில் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் மின்சார தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கு போட்டியாக ஏஐ தொழில்நுட்பங்களுக்கான டேட்டா மையங்களும் வந்து நிற்கின்றன எனும் போது பெரிய சிக்கலை நிச்சயம் இது உருவாக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் திட்டமிடுவது சரி ஆனால் அந்த மாற்றத்திற்கு ஏற்ற வகையிலான உள்கட்டமைப்புகளை நாம் கொண்டு வந்து விட்டோமா என்ற கேள்வி ஸ்ரீதர் வேம்புவின் பதிவின் மூலம் மிக வலுவாக எழுகிறது. சீனாவில் இப்படி தான் கிரிப்டோ மைனிங் தொழில்நுட்பம் அதிக மின்சார தேவை கொண்ட ஒரு செயல்பாடாக இருந்தது இதனால் கிரிப்டோ மைனிங்கையே அந்நாட்டு அரசு நிறுத்திவிட்டது.

இந்தியாவில் வெயில் காலங்களில் எல்லாம் மின்சார தேவை அதிகமாக இருக்கும். அதனை ஈடுக்கட்ட முடியாமல் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஏஐ தொழில்நுட்ப வருகை அடிக்கடி மின்வெட்டை கொண்டு வந்தால் அதிலும் நம்மை போன்ற மிடில் கிளாஸ் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+