என்ன பெரிய ஜியோ ஐபிஓ.. அமெரிக்காவில் Anthropic ஐபிஓ வருது பாருங்க.. 90 பில்லியன் டாலர் டாலர்கெட்..!

ஏஐ உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் ஆந்திரோபிக் ஐபிஓ வெளியிடத் தயாராகியிருக்கும் வேளையில், அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யும் பல இந்திய முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மாபெரும் ஐபிஓ-வில் எப்படியாவது நுழைய வேண்டும் எனத் தீவிரமாக உள்ளனர்.

உண்மையில் இந்தியர்களால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வெளியிடப்படும் ஐபிஓ-வில் முதலீடு செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது.

என்ன பெரிய ஜியோ ஐபிஓ.. அமெரிக்காவில் Anthropic ஐபிஓ வருது பாருங்க.. 90 பில்லியன் டாலர் டாலர்கெட்..!

ஏஐ தொழில்நுட்பம் அதன் வளர்ச்சிப் பாதையில் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் வேளையில், கிளாட் ஏஐ, ஃபேபிள் போன்ற முக்கியமான ஏஐ மாடலை உருவாக்கிய ஆந்திரோபிக் நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

ஏற்கனவே ஏஐ எகோசிஸ்டத்தில் டேட்டா சென்டர், கிளவுட் சேவை, ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் வேளையில் ஏஐ மாடல்களை உருவாக்கிய ஆந்திரோபிக், ஓப்பன்ஏஐ போன்ற ஏஐ நிறுவனங்களில் மட்டுமே பங்குச்சந்தையில் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் பெரும் நம்பிக்கையுடன், மிக்பெரிய ஐபிஓ திட்டமாக ஆந்திரோபிக் நிறுவனம், வருகிற நவம்பர் 18ஆம் தேதி ஐபிஓ விலையை நிர்ணயம் செய்து, நவம்பர் 19ஆம் தேதி அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

Also Read

இந்நிறுவனத்திற்கு ANT என்ற குறியீடு கொடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் ஒரு பங்கு விலை 70 -78 டாலர் விலையில் சுமார் 82.5 கோடி பங்குகளை விற்பனை செய்து சுமார் 90.35 பில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டி 1.35 - 1.45 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் பட்டியலிடப்பட உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்தியர்கள் ஆந்திரோபிக் ஐபிஓ-வில் முதலீடு செய்ய முடியுமா..?

முதல் விஷயம் இந்திய முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கி LRS திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ஒரு தனிநபர் 2.5 லட்சம் டாலர் வரையில் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும் என்பதால். இத்தொகையை வைத்து முதலீடு செய்யலாம்.

2வது விஷயம்.. இந்திய முதலீட்டாளர்கள் சர்வதேச பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சேவையை வழங்கும் ப்ரோக்கர்கள், இடைத்தரகர்கள் வாயிலாக வழக்கமான வழியில் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்யலாம், ஆனால் பெரும்பாலான தளங்கள் அமெரிக்கப் பங்குகளை வாங்க அனுமதிக்கும். ஆனால் ஐபிஓ-வில் முதலீடு செய்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு முதலீட்டைச் செய்யலாம்.

Recommended For You

இதேபோல் LRS வழித்தடத்தை மட்டுமே கொண்டு அமெரிக்க சந்தையின் ஐபிஓ-வில் முதலீடு செய்ய முடியுமா என்றால் இல்லை, FEMA, வெளிநாட்டு முதலீட்டு விதிகள், ஆர்பிஐ விதிமுறைகள் என பல விஷயங்களைக் கடந்து தான் ஒருவர் முதலீடு செய்ய முடியும்.

முக்கியமான விஷயம்.. இந்திய பங்குச்சந்தையின் ஐபிஓ போல் ரீடைல் முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என தனித்தனி பிரிவுகள் அமெரிக்க ஐபிஓ-வில் இல்லை. அமெரிக்கா பங்குச்சந்தையில் பெரும்பாலான பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு, பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுவதால், இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்கு இந்த IPO-வில் இருந்து பங்குகளை வாங்குவது என்பது மிகவும் கடினமான வாய்ப்பாகவே இருக்கும்.

இதேபோல் ஆந்திரோபிக் இந்த ஐபிஓ-வில் பொது சந்தையில் 64.35 பில்லியன் டாலரும், பிரைவேட் பிளேஸ்மென்ட் மூலம் 26 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் பெறுகிறது. இதன் மூலம் மொத்தமாக 90 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெறுகிறது. பிரைவேட் பிளேஸ்மென்ட் என்பது கிட்டத்தட்ட ஒரு QIP பிரிவு போல தான், இப்பிரிவின் வாயிலாக கூகுள், என்விடியா, ஏஎம்டி, பிராட்காம், மைக்ரான், மைக்ரோசாப்ட், TSMC போன்ற பல நிறுவனங்கள் பங்குகளை தனிப்பட்ட முறையில் வாங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+