டொனால்ட் டிரம்ப் ஜனவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை ஒரு ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், இப்புதிய மாற்றம் ஜனவரி 20 அன்று அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பொதுவாக 30 முதல் 45 சதவீதம் வரை வட்டியை வசூலிக்கும் வேளையில் இதை 10 சதவீதமாக குறைத்தால் அமெரிக்க மக்கள் வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் வரையிலான தொகையை சேமிக்க முடியும். ஆனால் இது வங்கிகளுக்கு பெரும் இழப்பாக இருக்கும்.
டிரம்ப் போன்று பிரதமர் மோடியும் கிரெடிட் கார்டு வட்டி விகிதக்கை குறைக்க உத்தரவிட முடியுமா..? டிரம்ப்-ன் செயல்பாடுகள் பலவும் அந்நாட்டு முதலீட்டு சந்தையையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் கலங்கடிக்கும் வகையில் இருக்கிறது.

ஆனால் இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்பதால் உலகம் முழுவதும் இத்தகைய எதிர்பார்ப்பு அந்நாட்டின் தலைவரிடம் இருந்து வர வேண்டும் என மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இப்படி இந்தியாவில் பிரதமர் மோடி கிரெடிட் கார்டுக்கு 10 சதவீதம் தான் வட்டி என அறிவிக்க முடியுமா..? ஆனால் டிரம்ப்-க்கு முன்பே இத்தகைய கேள்வி இந்தியாவில் எழுந்துள்ளது மட்டும் அல்லாமல் உச்ச நீதிமன்றமும் இதற்கு முக்கிமான தீர்ப்பையும், விளக்கத்தையும் கொடுத்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை 10 சதவீதம் என்ற வரம்பில் நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவித்தாலும், இந்த அறிவிப்பு சட்டபூர்வமாக அமல்படுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்திய உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஒரு வழக்கில் 2024 டிசம்பரில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவில் கிரெடிட் கார்டு மீதான வட்டி விகிதம் என்பது 36 முதல் 49 சதவீதம் வரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தில் ஹாங்காங் & ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் லிமிடெட் Vs அவாஸ் & ஓஆர்ஸ் (2024) என்ற வழக்கில், நுகர்வோர் அமைப்பான AWAZ & ORS. வங்கிகள் கிரெடிட் கார்டுக்கு அதிக வட்டி விதிப்பது குறித்து வங்கிகள் மீது வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் கிரெடிட் கார்டு வட்டி 30 சதவீதத்துக்கு மேல் இருந்தால் அது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று நுகர்வோர் அமைப்பு (NCDRC) உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வங்கிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தன.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரிச்ச உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கி (RBI) வரம்பு விதிக்காத பட்சத்தில் நுகர்வோர் அமைப்பு வரம்பு விதிக்க முடியாது என்று தீர்ப்பு கூறியது.
வங்கிகள் மற்றும் நுகர்வோரின் வாதங்கள்
இந்த வழக்கின் விசாரணையில் வங்கிகள் தங்கள் வாதத்தில், கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதம் விதிக்கும் போது ரிசர்வ் வங்கி விதிகளை எந்த வங்கிகளும் மீறவில்லை என்று முதலில் தெளிவுப்படுத்தியது. நுகர்வோர் அமைப்பான AWAZ, கிரெடிட் கார்டில் வங்கிகள் மறைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் அதிக வட்டி விதிப்பு நியாயமற்ற இது மக்களை அதிகளவில் பாதிக்கிறது என்று வாதிட்டது.
உச்சநீதிமன்றம் கூறுகையில், அதிக வட்டி விதிப்பது என்பது தவறான வர்த்தக நடைமுறையாக கருத முடியாது என்று கூறியது. வட்டி விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால் அதிக வட்டி விகிதம் விதிக்கப்பட்டாலும் சரியானது என்று விளக்கியது.
ரிசர்வ் வங்கியின் பங்கு மற்றும் ஆலோசனை
இந்த வழக்கின் விசாரணையின் போது ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில், வங்கிகள் தங்கள் நிர்வாக குழு அனுமதித்த கொள்கையின்படி வட்டி நிர்ணயிக்கின்றன என்று தெரிவித்தது. செலவுகள் மற்றும் லாபத்தை கருத்தில் கொண்டு வட்டி நியாயமானதாக இருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் வரம்பு ஏதும் விதிக்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியது.
ஆனால் இதேவேளையில் வங்கிகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு, கிரெடிட் கார்டு விதிகளை எளிய உதாரணங்களுடன் விளக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்ச தொகை செலுத்தாவிட்டால் ஏற்படும் வட்டி மற்றும் அபராதத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக ஆர்பிஐ இந்த வழக்கின் விசாரணையின் போது தெரிவித்தது.
இந்த தீர்ப்பு கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு மட்டும் அல்லாமல் மக்களுக்கும் முக்கியமானது. இந்த தீர்ப்பில் கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், வங்கிகள் கிரெடிட் கார்டுக்கு தங்களின் விருப்பத்தின் பெயரில் வட்டியை விதித்துக்கொள்ள முடியும். இதேபோல் இதை கட்டுக்குள் வைக்க வட்டி வரம்பு விதிக்க ரிசர்வ் வங்கி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அதிக வட்டி பிரச்சனையாக இருந்தாலும், அது சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தால் அநியாயமில்லை என்று நீதிமன்றம் தெளிப்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான தீர்ப்பு டிசம்பர் 2024ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது கிரெடிட் கார்டு மீதான வட்டி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என அறிவித்தால், இதை நடைமுறைப்படுத்துவதில் சட்ட போராட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications