ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஈரான் போர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிணாமத்தை எட்டி வருகிறது. ஒருவார காலத்தோடு இந்த போர் முடிந்த விடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு வாரமும் இந்த போர் புதிய புதிய ஆயுதங்களின் பயன்பாட்டால் தீவிரமடைந்த வண்ணம் தான் இருக்கிறது. யாராவது இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவார்களா என பல்வேறு உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

அமெரிக்கா , இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஈரான் ராணுவத்திற்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி இன்று வரை போர் நீடித்து வருகிறது. போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. இதனால் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து முடங்கிப் போய் இருக்கிறது. ஆசிய நாடுகளுக்கு தேவையான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எல்பிஜி,எல்என்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை!!

இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த நாடுகளும் முன் வருவதாக தெரியவில்லை. முதலில் ரஷ்யா மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறியது ஆனால் அதற்கு இரு நாடுகளும் ஒத்துவராததால் ரஷ்யா அந்த முடிவினை கைவிட்டது. இந்த சூழலில் ஈரானுடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனும் நல்லுறவு கொண்டிருக்கக்கூடிய உலக நாடுகளும் அந்த நாடுகளின் தலைவர்களும் சமரச பேச்சுவார்த்தை நடத்த பல்வேறு நாடுகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.

Also Read

அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கர்ணல் டக்லஸ் மெக்ரேகர் இருதரப்பிலும் சமரசம் செய்ய இந்திய பிரதமரால் மட்டுமே முடியும் என கூறியிருந்தார். பின்லாந்து நாட்டு பிரதமர் கூட அதிபர் கூட இந்தியா நினைத்தால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஈரான் அதிபர் மசூத் பெஷசிக்சினுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை!!

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பிரதமர் மோடி ஈரான் அதிபர் உடன் தொலைபேசியில் பேசினேன் , ரம்லான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன் என கூறியிருக்கிறார். மேற்காசியாவில் அமைதி , ஸ்திரத்தன்மை கொண்ட எதிர்காலம் அமைய இருவருமே விரும்புகிறோம் என அதில் குறிப்பிட்டு இருக்கிறார். பிராந்தியத்தின் முக்கிய அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி தடைப்பட்டு இருக்கிறது இதற்கு கண்டனம் தெரிவித்ததாக மோடி கூறியுள்ளார்.

தடையற்ற கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்போது வலியுறுத்தியதாக கூறியிருக்கும் மோடி ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாடு தொடர்ந்து ஒத்துழைப்பு தருகிறது அதற்காக நன்றி தெரிவித்தேன் என கூறியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஈரான் தரப்பில் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் மேற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை உருவாக்குது, அமைதியை நிலைநிறுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு பங்காற்ற வேண்டும் என கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி , ஈரான் அதிபருடன் பேசுவதற்கு முன் சில தினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 18 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயித் அல் நயான், குவைத் இளவரசர் ஆகியோருடனும் பேசியிருந்தார். அதே போல பிரான்ஸ் ,ஜோர்டன், மலேசியா நாட்டு தலைவர்களுடன் பேசி இருந்தார். இதனை அடுத்து அவர் ஈரானுடன் பேசியிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியா மத்தியஸ்த முயற்சி எடுத்து ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்தால் உலக அரசியலில் இந்தியாவுக்கு அசைக்க முடியாத இடம் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+