நிறைய பணம் வச்சிருக்கீங்களே நிம்மதியா இருக்கீங்களா? ரெட்டிட் பயனரின் கேள்விக்கு பில்கேட்ஸ் சொன்ன பதில்!

ணம் உண்மையிலேயே மகிழ்ச்சியை தருமா? என்ற கேள்வி நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதை சிலர் வெளிப்படையாக ஒத்துக் கொள்வார்கள். ஆம் பணம் இருந்தால் தான் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும் என்று.. ஆனால் சிலரோ சுற்றி வளைத்து இதற்கு பதில் கூறுவார்கள். உதாரணமாக ஒரு நாய்க்குட்டி உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றால்.. அதை வாங்குவதற்கும் பணம் வேண்டும். அப்படியானால் பணம் மகிழ்ச்சியை தருகிறது அல்லவா? என்பன போன்ற நாசுக்கான பதில்களை சொல்வார்கள்.

ஆக மக்கள் அனைவரும் பணம் இருந்தால் தான் மகிழ்ச்சி என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இதே கேள்வியை ஒரு பணக்காரரிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்? அதைத்தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரரான பில்கேட்ஸ்-ஸிடம் பணம் உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறதா? என்ற கேள்வியை ரெட்டிட் பயனர் ஒருவர் கேட்டுள்ளார். அவர் "இவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்களே.. உண்மையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுள்ளார். அதற்கு பில்கேட்ஸ் சொன்ன பதில் தான் அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.

நிறைய பணம் வச்சிருக்கீங்களே நிம்மதியா இருக்கீங்களா? ரெட்டிட் பயனரின் கேள்விக்கு பில்கேட்ஸ் சொன்ன பதில்!

பில்கேட்ஸ் பணம் உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது என்று ஒப்புக்கொண்டார். "என்னிடம் பணம் இருக்கிறது, ஆடம்பர வாழ்க்கை எல்லாம் கிடைக்கிறது என்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை. நாளைக்கே எனக்கோ என் குடும்பத்திற்கோ அவசர மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால் என்ன செய்வது? என்ற கவலை எனக்கு இல்லை. அதேபோல பிள்ளைகளின் படிப்புச் செலவுகள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற விஷயங்கள் தான் உண்மையில் பணத்தால் எனக்கு கிடைத்த விஷயங்கள்" என்று கூறியுள்ளார்.

ஒரு சாமானியனுக்கு என்னென்ன விஷயங்களுக்கு கவலை இருக்குமோ? அந்த விஷயங்களுக்கெல்லாம் தான் பயப்படவில்லை என்பதையே பில்கேட்ஸ் பதிவு செய்தார்.

உலக பணக்காரராக இருக்கும் ஒருவர் மாட மாளிகைகள், ஜெட் விமானங்கள் போன்றவை தான் தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்வாரோ என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் உண்மையிலேயே அன்றாட வாழ்க்கையைச் சரியாக நடத்த போதுமான அளவு பொருளாதாரம் இருந்தாலே ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க முடியும் என்ற தொனியிலேயே பதில் அளித்தார். இன்றைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பதே கடினமாக உள்ளது.

ஏனெனில் செலவுகள் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. மருத்துவச் செலவுகள், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை பார்த்தால் இனி வரும் சந்ததியினருக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவதே சிரமமாக இருக்கும் சூழல் நிலவுகிறது. மறுபுறம் தங்கம், வீட்டு வாடகை என அனைத்து செலவுகளும் உயர்ந்து வருகிறது, இப்படிப்பட்ட கடினமான காலத்தில் ஒரு சாமானியனுக்கு மறு மாத சம்பளத்தில் எப்படி குடும்பத்தை ஓட்டுவது என்ற சிந்தனையே அதிகம் இருக்கிறது.

ஆனால் இது போன்ற விஷயங்களுக்கு நான் கவலைப்பட அவசியமில்லை என்ற எண்ணம் தான் பில்கேட்ஸிடமும் பிரதிபலிக்கிறது. இதையே ஆராய்ச்சி முடிவுகளும் ஒப்புக்கொள்கின்றன, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான டேனியல் கானேமன் மற்றும் ஆங்கஸ் டீட்டன் 2010-இல் ஒரு ஆய்வை நடத்தினர். அந்த ஆய்வில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை சரிவர பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வருமானம் அதிகரித்தால் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.

ஆக மகிழ்ச்சியாக இருக்க கோடி கோடியாக பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்து வரும் நாட்களை சமாளிக்க போதிய பணம் இருந்தால் போதும். பண நெருக்கடியால் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இல்லாமல் இருந்தாலே ஒருவர் மகிழ்ச்சியாக உணரலாம். என்பதே பில்கேட் பேச்சிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+