இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பதும் 18 வயதுக்கு மேலானவர்கள் ஒரு வங்கி கணக்கு மற்றும் டீமேட் கணக்கை தொடங்கி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்பதும் தெரிந்ததே.
வெளிநாட்டு இந்தியர்கள்
இந்த நிலையில் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதன் பலனை அடைய முடியுமா என்றால் முடியும் என்பதுதான் பதில். ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன.
இரண்டு திட்டங்கள்
இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு இந்தியர்களின் முதலீடு மற்றும் அதன் ஆதாயங்களை தாங்கள் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்லும் அடிப்படையில் தொடங்கப்படும் NRE கணக்கு என்பது ஒன்று. இன்னொன்று இந்தியாவில் செய்யப்படும் முதலீடு மற்றும் அதன் ஆதாயத்தை இந்தியாவிலேயே வைத்திருக்கும் அடிப்படையில் துவங்கப்படும் NRO அக்கவுண்ட் ஆகும்.
அமெரிக்கா-கனடா
வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு கேஒய்சி உள்பட அனைத்து ஒழுங்கு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் என்ஆர்ஐ மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுவதை கட்டுப்படுத்தி உள்ளன. எனவே இந்த நாடுகளில் உள்ளவர்கள் மட்டும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு முன் அதற்கான சாத்தியக் கூறுகளை நிதி ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது இந்திய முதலீட்டாளர்களை போன்ற அனைத்து நன்மைகளையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெளிநாட்டு இந்தியர்கள் எஸ்ஐபி மற்றும் லம்ப்சம் ஆகிய இரண்டு வகைகளிலும் முதலீடு செய்ய முடியும். இந்திய முதலீட்டாளர்கள் போலவே தங்கள் வசதிக்கேற்ப ஸ்விட்ச் செய்து கொள்ளும் வசதியும் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்தும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆலோசகர்கள்
அதேபோல் வெளிநாட்டு இந்தியர்கள் தாங்கள் செய்த முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விரும்பும் போது பணமாக்கிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு இந்தியர்களும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. எனவே வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக பலன் பெற வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications