நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா? உங்களுக்கு பரம்பரை சொத்து கிடைத்திருக்கிறதா? அந்த சொத்தை விற்று விட்டு பணத்தை சட்டப்பூர்வமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கான வரி தாக்கங்கள் என்னென்ன? என்பது குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் பரம்பரை சொத்தை விற்பனை செய்வதற்கு என்னென்ன வரிகள் உள்ளது என்பதற்கான விளக்கத்தை வரி நிபுணர் ராஜ் லகோடியா பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவில் பரம்பரை சொத்து விற்பனை தொடர்பான வரி விதிப்புகள், டிடிஎஸ் எவ்வளவு மற்றும் விற்பனை தொகையை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான விதிமுறை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

வெளிநாடு வாழ் இந்தியர் பரம்பரைச் சொத்தை பெறுவதற்கு வரி உண்டா?: முதலில் வெளிநாடு வாழ் இந்தியர் தனது தந்தையிடம் இருந்து அல்லது தனது பரம்பரையிடமிருந்து சொத்தை பெறுவதற்கு வரி இல்லை. இது போன்ற வரியை "இன்ஹெரிட்டன்ஸ் டேக்ஸ்" என்று கூறுவார்கள். ஆனால் இந்தியாவில் பரம்பரை சொத்துக்கு வரி கிடையாது.
பரம்பரை சொத்தை விற்பனை செய்தால் எவ்வளவு வரி?: பரம்பரை சொத்தை விற்பனை செய்ய முடிவெடுத்து விட்டால் லாபத்தின் மீது மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். ஆனால் இந்த வரி விகிதம் சொத்தை நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருந்தீர்கள் என்ற கால அவகாசத்தைப் பொருத்து மாறுபடும்.
இது உங்கள் பரம்பரையில் சொத்தை வைத்திருந்த காலத்தையும் சேர்த்து தான் கணக்கிடப்படும். அதாவது உங்கள் தந்தையிடமிருந்து உங்களுக்கு சொத்து வருகிறது என்றால், உங்கள் தந்தையிடம் எவ்வளவு காலம் சொத்து இருந்தது? அதன் பிறகு உங்களிடம் எவ்வளவு காலம் இருந்தது? என்பதை எல்லாம் பொறுத்து கணக்கிடப்படும். 24 மாதங்களுக்கு மேல் நீங்கள் சொத்தை வைத்திருந்து விற்பனை செய்தால் வரி செலுத்த வேண்டும். அப்படி இருந்தால் 12.5% வரை வரி விதிக்கப்படும்.
சொத்து விற்பனை: சொத்தை விற்பனை செய்யும் போது வாங்குபவர் விற்பனை தொகையிலிருந்து 12.5% டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.
அதேபோல நீங்கள் சொத்தை விற்பனை செய்யும் போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று முன்பே பார்த்தோம். சில நேரங்களில் நீங்கள் சொத்தை விற்பதால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் விற்பனை தொகையின் 12.5% வரியை விட குறைவாக இருக்கும்.
உதாரணமாக ரூ.1 கோடிக்கு நீங்கள் சொத்தை வாங்கி விற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு 12.5 லட்சம் வரை டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஆனால் சொத்தை வாங்கிய விலை, மேம்பாட்டு செலவுகள் போன்றவற்றையெல்லாம் கழித்து விட்டு பார்க்கும்போது உங்களுக்கு கிடைத்த லாபம் 50 லட்சம் மட்டும் தான்.
இதற்கு 12.5% வரி விதிக்கப்பட்டால் ரூ. 6.25 லட்சம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழலில் 12.5% ரூ.1 கோடிக்கு பிடித்தம் செய்யப்படுவது மிகவும் அதிகம். எனவே நீங்கள் வருமானவரித்துறை அதிகாரியிடம் உங்கள் கருத்தை சொல்லி விண்ணப்பம் செய்யலாம். நீங்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்கள், நீங்கள் சொத்தை வாங்கிய விலை, விற்பனை விலை போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிகாரிக்கு திருப்தி இருந்தால் பூஜ்ஜிய டிடிஎஸ் பிடித்ததோடு நீங்கள் விற்பனை செய்யலாம்.
பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாமா?: நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால் இங்கு சொத்தை விற்பனை செய்துவிட்டு தொகையை இந்தியாவில் விதிக்கப்படும் அனைத்து வரிகளையும் செலுத்திய பின்னர் எடுத்துச் செல்லலாம். ஆனால் கட்டாயம் வரிகளை செலுத்தியிருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் 1 மில்லியன் டாலர் வரையில் எடுத்துச் செல்லலாம். இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.8 கோடி.
இதில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு கூடுதலாக வரி தொடர்பான ஆலோசனைகளைப் பெற வரி நிபுணர்களை அணுகலாம். உங்கள் நிதி முடிவுகளை சரியான முறையில் எடுக்கவும், சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications