பலருக்கும் பெற்றோர்களின் சொத்துகளில் பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமை பற்றி தெரியும். ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சொத்துகளுக்கு உரிமை கோர முடியுமா? என்பது பலருக்கும் தெரியாது. இதற்கும் சட்டம் சில விதிகளை வகுத்துள்ளது. குழந்தையின் பாலினத்தை பொறுத்து இது மாறுபடலாம். இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பாக.. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சொத்துக்களில் உரிமை கோர பல்வேறு சூழல் ஏற்படலாம். அது குறித்த தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெற்றோர்களின் பொதுவான உரிமைகள்: பொதுவாக பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் சொத்துக்கள் மீது உரிமையில்லை. ஆனால் அதை கோரக் கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. 2005-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் எந்தவித உயிலும் எழுதி வைக்காமல் இறந்து விட்டால் பெற்றோர்கள் குழந்தையின் சொத்தை பெறுவதற்கு வாய்ப்புண்டு.

தாய்க்கு முன்னுரிமை: இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தை அகால மரணம் அடைந்தால் முதல் வாரிசாக தாய்க்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல இரண்டாவது வாரிசாக தந்தை கருதப்படுகிறார். ஒருவேளை தாய் உயிருடன் இல்லை என்றால் அல்லது அவருடைய பரம்பரை உரிமை கோர முடியவில்லை என்றால் இரண்டாவது வாரிசாக இருக்கும் தந்தை சொத்துக்கு உரிமை கோரலாம்.
மகன்கள் மற்றும் மகள்களுக்கான விதிகள்: குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதைப் பொருத்தும் பெற்றோர்கள் சொத்துக்கு உரிமை கோருவதில் மாறுதல்கள் இருக்கும். இந்து வாரிசுரிமைச் சட்டம் பாலினா அடிப்படையிலான சட்டங்களை வகுத்துள்ளது.
மகன்கள்: உயில் எழுதாமல் ஒரு மகன் இறந்துவிட்டால் தாய் தான் முதல் வாரிசு. அதைத்தொடர்ந்து தந்தை இருப்பார். ஆனால் தாய் இறந்து விட்டால் தந்தை மற்ற வாரிசுகளுடன் சேர்ந்து சொத்தை சமமாக பிரித்துக் கொள்வார்.
மகள்கள்: மாறாக ஒரு மகள் உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால் அவருடைய சொத்து அவர் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவருடைய கணவருக்கு வழங்கப்படுகிறது. இறந்த மகளின் பெற்றோருக்கான உரிமை கோரல் கடைசியாக தான் இருக்கும். மேலும் இறந்தவரின் குழந்தைகள் கணவர் பங்கை கோரிய பின்னரே பெற்றோர்கள் வர முடியும்.
ஒருவேளை மகளுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவருடைய பெற்றோர்கள் தான் சொத்தில் அதிகாரப்பூர்வ வாரிசுகளாக கருதப்படுவர். திருமணம் ஆனபின் மகள்கள் இறந்தால் முதலில் இறந்தவரின் குழந்தைகள், பின்னர் அவருடைய கணவன், அதன்பின்னரே பெற்றோர்கள் வர முடியும்.


Click it and Unblock the Notifications