12 டிஜிட் ஆதார் நம்பரை வைத்து அக்கவுண்டில் பணம் திருட முடியுமா? UIDAI சொன்ன விளக்கம்! மக்களே உஷார்!

நம் நாட்டில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டும் மிக மிக முக்கியமான அடையாள ஆவணங்களாக இருக்கிறது. எவ்வளவு முக்கியம் என்றால் வங்கி கணக்கு திறப்பது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்திற்கும் இந்த இரண்டு கார்டுகளில் ஏதோ ஒன்றைத் தான் கேட்கின்றனர். ஆதார் கார்டில் ஒருவருடைய பெயர், முகவரி, டேட் ஆஃப் பர்த், போன் நம்பர் மற்றும் 12 இலக்க பிரத்தியேக ஆதார் நம்பர் இருக்கும். அதோடு கூடுதலாக உங்களுடைய புகைப்படமும் இருக்கும். இப்படிப்பட்ட முக்கியமான கார்டை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அதுவும் இன்றைய மோசடிக்காரர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆதார் கார்டை பயன்படுத்துகின்றனர்.

அப்படிப்பட்ட சூழலில் மக்களுக்கு எழும் பொதுவான கேள்வி என்னவென்றால், ஒருவரின் ஆதார் கார்டை வைத்து வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியுமா? என்பதுதான். இதற்கான பதிலை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மக்களின் இந்த கேள்விக்கு ஆதார் கார்டை வழங்கிய இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பதிலளித்துள்ளது. உங்கள் ஆதார் கார்டு நம்பர் அல்லது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கியில் இருந்து நேரடியாக யாரும் பணத்தை எடுக்க முடியாது. உங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானால் அதற்கு உங்களுடைய சிக்னேச்சர், டெபிட் கார்ட், பின் நம்பர், ஓடிபி போன்றவை தேவைப்படும். அதேபோல ஆதார் மூலம் பணம் எடுக்க உங்கள் கைரேகை, கருவிழி ஸ்கேன் அல்லது ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் ஓடிபி ஆகியவை தேவைப்படும்.

12 டிஜிட் ஆதார் நம்பரை வைத்து அக்கவுண்டில் பணம் திருட முடியுமா? UIDAI சொன்ன விளக்கம்! மக்களே உஷார்!

இதுவரையில் நடந்த மோசடி சம்பவங்களில் ஆதார் நம்பரை வைத்து ஆள்மாறட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அனால் இதுவரையில் யாரும் நிதி இழப்பை சந்திக்கவில்லை என்று UIDAI தெரிவித்துள்ளது.

AePS மோசடி என்றால் என்ன?: ஆதார் நம்பரை வைத்து உங்களுடைய பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுக்க முடியாது என்று UIDAI தெரிவித்திருந்தாலும், ஒரு சில விஷயங்களை குடிமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆதார் நம்பரோடு உங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களும் கசிந்திருந்தால் அதை வைத்து மோசடிக்காரர்கள் உங்கள் கணக்கில் இருந்து பணத்தை திருட வாய்ப்புள்ளது.

எனவே குடிமக்கள் இது தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் ஆதார் நம்பரோடு பயோமெட்ரிக் தரவுகளான கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆகியவை கசியும்போது பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதையே ஆதார் எனேபில்ட் பேமெண்ட் சிஸ்டம் (AePS) மோசடி என்று கூறுகிறோம்.

மோசடி எப்படி நடைபெறுகிறது?:

டேட்டா திருட்டு: மோசடி செய்பவர்கள் உங்களுடைய கைரேகையின் காப்பியை முதலில் எடுக்கின்றனர். உதாரணமாக நீங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று இருந்தால், உங்கள் சொத்துப்பதிவு ஆவணங்களின் கைரேகை சேமிக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து அவற்றை மோசடிக்காரர்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டு.

ஆதார் எனேபில்ட் பேமெண்ட் சிஸ்டம் (AePS): கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஏடிஎம் பயன்படுத்துவதற்கும் நகரங்களை நோக்கி வரவேண்டும். அதற்காகத்தான் இந்த ஏஇபிஎஸ் நடைமுறை வந்தது. அதாவது மக்கள் மைக்ரோ ஏடிஎம் மூலம் அவர்களுடைய கை ரேகையை பயன்படுத்தி கிராமப்புறங்களிலேயே பணம் எடுக்கலாம். இதைத்தான் ஏமாற்றுக்காரர்கள் தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உங்களுடைய கைரேகை விவரங்களை சிலிக்கான் அல்லது ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி அச்சு அசலாக எடுத்து விடுகின்றனர். அதன் பிறகு அவர்களிடம் இருக்கும் உங்களுடைய ஆதார் நம்பரையும் போலி கைரேகையும் பயன்படுத்தி மைக்ரோ ஏடிஎம் மூலம் பணம் எடுக்கின்றனர்.

உங்களுடைய பயோமெட்ரிக் விவரங்கள் கிடைத்தவுடன் ஓடிபி உங்கள் மொபைலுக்கு வராமலேயே பணத்தை எடுக்கின்றனர். இதனால் தான் உங்களுடைய ஓடிபி, பின் நம்பர் சிவிவி நம்பர் போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என கூறப்படுகிறது. யாரேனும் உங்களை தொடர்பு கொண்டு otpயை சொல்லவில்லை என்றால் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும் என்று சொன்னால் உடனே அழைப்பை துண்டித்து விடுங்கள். ஏனெனில் வங்கிகள் இதுபோன்ற அழைப்பை ஒருபோதும் செய்யாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+