இந்திய அரசு நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பலனடைகின்றனர். பல்வேறு மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு புதிய திட்டங்களையும் தொடர்ந்து அரசு அறிமுகம் செய்கிறது. அப்படித்தான் "பிரதம மந்திரி அவாஸ் யோஜனா" திட்டமும் செயல்பட்டு வருகிறது.
சொந்த வீடு என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இந்தக் கனவை நிறைவேற்ற பலரும் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் சிலருக்கு தங்கள் கனவை நிறைவேற்ற முடிவதில்லை. இன்னும் நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பதற்காக இந்திய அரசு உதவி வருகிறது. அதற்காகத்தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2017-ஆம் ஆண்டில் அரசு தொடங்கியது. இதன் கீழ் இந்திய அரசு ஏழை எளியவர்களுக்கு வீடு கட்ட உதவி வருகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற மக்கள் வருமானத்தின் அடிப்படையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவுகளின் கீழ் மக்கள் மானியத்துடன் கூடிய கடன் பெற முடியும். அவை EWS (பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு), LIG (குறைந்த வருமானம் பெறுபவர்கள்) மற்றும் MIG (நடுத்தர வருமான பெறுபவர்கள்).
இதில் MIG I பிரிவினர்கள் ரூ. 6 முதல் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் பெற வேண்டும். இந்த பிரிவினர் மானியத்துடன் கூடிய கடன் தொகையாக ரூ. 9 லட்சம் வரை பெற தகுதியுடையவர்கள். MIG I பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 12 முதல் ரூ. 18 லட்சம் வரை இருக்க வேண்டும். இந்த பிரிவினருக்கு மானியத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பு ரூ.12 லட்சம். LIG பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்காக அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ரூ.6 லட்சம். EWS பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்காக வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடன் தொகை ரூ. 6 லட்சம் ஆகும். இந்த கடன்களுக்கு குறிப்பிட்ட விகிதங்களில் மானியம் வழங்கப்படுகிறது.
உதாரணமாக நீங்கள் MIG I பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலும் கடன் வாங்கி ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதில் 12 லட்சம் வரையிலான கடனில் நீங்கள் 3 % சதவீதம் மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள். மீதமுள்ள ரூ. 18 லட்சத்திற்கு மட்டும் வட்டியும் முதலுமாக நீங்கள் செலுத்தினால் போதுமானது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் தகுதி பெற முடியும்?: பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் விதிகளின்படி ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே திட்டத்தின் பலனை பெற முடியும். உதாரணமாக தந்தை மற்றும் மகன்கள் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கும் பட்சத்தில் தந்தை அல்லது மகன் என ஒருவர் மட்டுமே திட்டத்தின் பலன்களை பெற முடியும். இரண்டு பேர் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது தனித்தனி ரேஷன் கார்டு உள்ளது என்றால் இருவருமே விண்ணப்பித்து பலன்களை பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications