இந்தியா முழுவதும் தற்போது ட்ரெண்டாக மாறியிருக்கிறார் விஜய் மல்லையா .கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்றால் தான் அனைவருக்கும் இவரை தெரியும். இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் நாட்டை விட்டு வெளியேறி தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
டிரெண்டான விஜய் மல்லையா: அண்மையில் விஜய் மல்லையா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இந்தியா முழுவதும் வைரலானது. அந்த பேட்டியில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் தோல்வி அடைந்தது , இந்தியாவிற்கு தான் திரும்ப முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் பகிர்ந்தார். தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் அளித்த ஒரு நேரடி பேட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த பேட்டி டிரெண்டானது.

மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள்: எந்தெந்த நிறுவனங்களில் எல்லாம் விஜய் மல்லையாவுக்கு பங்குகள் இருக்கின்றன அந்த பங்குகளில் இருந்து எல்லாம் அவருக்கு லாபம் கிடைக்கிறதா, விஜய் மல்லையாவால் தொடர்ந்து இந்தியாவில் தனக்கு சொந்தமாக இருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்ய முடியுமா என்பன உள்ளிட்ட விவரங்களை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விஜய் மல்லையா கிங் பிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான யுனைடெட் ப்ரீவரிஸ் நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், மெக்டொவல் ஹோல்டிங்ஸ் என்ற நிதி நிறுவனம் தற்போது செயல்படாமல் இருக்கக்கூடிய கிங் பிஷர் நிறுவனத்திலும் சொந்தமாக பங்குகளை வைத்திருந்தார். இது தவிர மங்களூர் கெமிக்கல் & பெர்டிலைசர் நிறுவனம், ஹெர்பர்ட்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் விஜய் மல்லையா பங்குகளை வாங்கி வைத்திருந்ததார்.
செபி என்ன சொல்கிறது: விஜய் மல்லையா கடன்களை திரும்ப வழங்காமல் நாட்டை விட்டு வெளியேறியதால் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முடக்கி வைத்துள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன்கள் திரும்ப செலுத்தப்பட்டன. விஜய் மல்லையாவை பொறுத்தவரை இந்த நிறுவனங்களில் அவருக்கு பங்குகள் இருந்தாலும் தற்போது அவற்றின் நிலை குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
சொத்துக்கள் முடக்கம்: அவரால் தற்போது அந்த பங்குகளில் வர்த்தகமும் செய்ய முடியாது. ஏனெனில் அவர் கடன் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நபராக அறியப்பட்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன அல்லது முடக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களில் அவரது பங்குகளும் அடங்கும். எனவே விஜய் மல்லையா இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு செபி தடை விதித்திருக்கிறது.
விஜய் மல்லையா ஒரு காலத்தில் தனக்கு சொந்தமானதாக யுனைடெட் பிரிவரிஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போதும் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. யார் வேண்டுமானாலும் அவற்றை வாங்கலாம் யார் வேண்டுமானாலும் இந்த நிறுவன பங்குகளில் தற்போது முதலீடு செய்யலாம். தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகள் பெரும்பாலும் முதலீட்டு நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications