2024 பொதுத் தேர்தல்கள், ஏப்ரல் 19, 2024 முதல் துவங்கி ஏழு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஜூன் 4, 2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்த 5 வருடத்திற்கான நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது.
ஒருபக்கம் பிஜேபி 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி முக்கியமானதாக இருக்கும் அதேவேளையில் எதிர்க்கட்சிகள் அதிகப்படியான வாக்குகளைப் பெறும் என பல தரப்பட்ட கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல் மக்களின் வாக்குகள் தான் இந்த தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்க உள்ளது.

இந்த நிலையில் மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் நாட்டின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய சக்தி கொண்டு இருக்கும் வேளையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை சிந்தித்து அளிக்கும்படி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதலில் நம்முடைய வாக்குகளை செலுத்த வாக்காளர் அடையாள அட்டை எனப்படும் EPIC அட்டை வைத்திருப்பது அவசியம். இது ஒவ்வொரு தனிநபரின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முக்கிய ஆவணமாக உள்ளது. குடிமக்கள் தங்கள் வாக்குகளை அளிக்கவும், தேர்தல் செயல்பாட்டில் பங்களிக்கவும் உதவும்.
இதேவேளையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தனிநபர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் நகல் இல்லாவிட்டாலும், வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளது. அது எப்படி..?
ஒவ்வொரு தனிநபரும் வாக்களிக்கும் தகுதியை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இதன் மூலம் தேர்தலில் வாக்குகளை செலுத்த முடியும்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிப்பது எப்படி:
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வகுத்துள்ள உத்தரவுகளின்படி, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட தேர்தலில் வாக்களிப்பது சாத்தியமாகும்.
இருப்பினும், தேர்தலில் வாக்களிக்கத் தனிநபர்கள் ECI வாக்காளர் பட்டியலில் தங்களைச் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும், இது அவர்களைத் தகுதியான வாக்காளர்களாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள, அவர்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியிடம் (ERO) படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டவுடன், அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல், வாக்களிக்கும் உரிமையை பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications