ஜப்பான்: ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்பவர் எத்தனை நாட்கள் அந்த நிறுவனத்தில் நீடிப்பார் என்பதை கணிக்க கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை பொறுத்தவரை ஊழியர்கள் பிரச்னை பெரிதாக இருக்கிறது.இங்குள்ள நிறுவனங்கள் கல்லூரி பட்டப்படிப்பு முடிப்பவர்களை பணிக்கு அமர்த்துகின்றன. ஆனால் இவ்வாறு பணி அமர்த்தப்படுபவர்களில் 10இல் ஒருவர் ஓராண்டுக்குள்ளே பணியில் இருந்து சென்றுவிடுகிறார். அதே போல 30% பேர் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே பணியில் இருந்து விலகிவிடுகின்றனர் என்கிறது ஜப்பான் அரசின் தரவுகள்.

இந்நிலையில் புதிதாக வேலைக்கு சேர்பவர்கள் எத்தனை நாட்கள் அந்த பணியில் நீடிப்பார் என்பது குறித்து மேலாளர்களுக்கு கவலை இருக்கிறது. இந்த பிரச்சினையை போக்குவதற்காக ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்த கருவி ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேரக்கூடிய ஒருவர் எத்தனை நாட்கள் அந்த பணியில் நீடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது, என்பதை இந்த AI டூல் கணிக்கும். இந்த செயற்கை நுண்ணறிவு கருவியானது ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் தரவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முடிவுகளை வழங்கும்.
ஒரு ஊழியரின் வயது, பாலினம் மற்றும் லீவு எடுக்காமல் பணிக்கு வருகிறார்களா, அப்படி லீவு எடுத்திருந்தால் என்ன காரணத்திற்காக லீவு எடுத்து இருக்கிறார்கள் என்பன போன்ற தரவுகளை இது ஆய்வு செய்கிறது. டோக்கியோ சிட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நருஹிகோ சிரட்டோரி குழுவினரால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு ஊழியர் நிறுவனத்திலிருந்து எப்போது வேலையை விட்டு செல்கிறார் , எப்பொழுது விடுமுறை எடுத்துக் கொண்டார் மற்றும் வேறு நிறுவனத்திற்கு சென்ற பிறகு அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பன போன்ற தகவல்களையும் இது பகுப்பாய்வு செய்கிறது.
ஒரு ஊழியரை என்ன செய்தால் நிறுவனத்தில் தக்க வைத்து கொள்ள முடியும் என்ற தகவல்களையும் இது வழங்குகிறது.இதற்காக பல்வேறு நிறுவனங்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருவதாகவும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு மாடல்களை உருவாக்கி வருவதாகவும், பேராசிரியர் நறுஹிகோ சிரட்டோரி கூறியுள்ளார்.
இந்த ஏஐ கருவி மூலம் மேலாளர்கள் தங்களது ஊழியர்கள் குறித்த தகவல்களை பரவலாக தெரிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
புதிதாக வேலைக்கு சேர கூடிய நபரின் ரெஸ்யூம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் அவரது இதற்கு முன்பு அவர் வேலை செய்த ஆகியவை கொண்டு அவர்களுக்கு பொருத்தமான வேலையை வழங்கும் பணியையும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவி மேற்கொள்ள இருக்கிறது. ஜப்பானில் நிலவும் தொழிலாளர் பிரச்னைக்கு இது தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications