பான் கார்டு வருமான வரித் தாக்கல் செய்யும் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். KYC சரிபார்ப்பு முதல் வங்கி பரிவர்த்தனைகள் வரை அனைத்திற்கும் தேவைப்படும் முதன்மையான ஆவணங்களில் பான் கார்டும் ஒன்று. நாம் பான் கார்டை பற்றி பேசும் போதெல்லாம் பெரியவர்கள் தான், நம் நினைவிற்கு வருவது. ஆனால் குழந்தைகளுக்கும் பான் கார்டு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் எந்த சூழ்நிலை வரும்போது குழந்தைகளுக்கு பான் கார்டு எடுக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பான் கார்டு பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. 18 வயதுக்குட்பட்ட மைனர்களும் பான் கார்டைப் பெறலாம். இருப்பினும், விண்ணப்பம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் செய்யப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எப்போது பான் கார்டு தேவை?:
1. முதலீட்டு நோக்கங்கள்: நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால், அப்போது பான் கார்டு தேவைப்படலாம்.
2. முதலீடுகளுக்கான நாமினி: உங்கள் முதலீடுகளுக்கு உங்கள் குழந்தையை நாமினி ஆக்க விரும்பினால் பான் கார்டு பெறுவது அவசியம்.
3. வங்கிக் கணக்குகள்: உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்கும்போது தேவைப்படும்.
4. வருமானம் ஈட்டுதல்: உங்கள் குழந்தைகளுக்கு வருமான ஆதாரம் இருந்தால், அப்போது பான் கார்டு தேவை.
குழந்தைகளுக்கான பான் கார்டுக்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?:
ஸ்டெப் 1: NSDL இணையதளத்திற்குச் சென்று படிவம் 49A-ஐ டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: படிவம் 49A-ஐ நிரப்பவும், வழிமுறைகளை கவனமாகப் படித்து, சரியான முறையில் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நிரப்பவும்.
ஸ்டெப் 3: குழந்தையின் பர்த் சர்டிபிகேட், தேவையான ஆவணங்கள் மற்றும் பெற்றோரின் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
ஸ்டெப் 4: பெற்றோரின் கையொப்பத்தைப் பதிவேற்றி, 107 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவும்.
ஸ்டெப் 5: விண்ணப்ப நிலையைக் கண்காணிக்க படிவத்தைச் சமர்ப்பித்து ரசீது எண்ணைப் பெறவும்.
ஸ்டெப் 6: அதன் பின், 15 நாட்களுக்குள் பான் கார்டைப் பெறுவீர்கள்.


Click it and Unblock the Notifications