உங்கள் சேமிப்பு 3 மடங்காக மாற.. எத்தனை ஆண்டுகள் எடுக்கும்? இந்த சிம்பிள் ட்ரிக் போதும்! ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!

கிட்டத்தட்ட எல்லா முதலீட்டாளர்களுக்கும் தங்களுடைய முதலீடு எடுத்தவுடன் 3 மடங்காக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதைத்தான் இன்றைய மோசடிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதை நம்பி அப்பாவி மக்களும் லட்சங்களில் பணத்தை இழந்து வருகின்றனர். யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்யாமல் உண்மையிலேயே உங்கள் சேமிப்பு எப்போது 3 மடங்காக மாறும் என்பதை நீங்களே தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம்.

இதைத் தெரிந்து கொள்ள சில ஃபார்முலாக்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற ஃபார்முலாக்களை பயன்படுத்தினால், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள்?, அதற்கு வட்டி எவ்வளவு? என்பதை எல்லாம் வைத்தே அது எத்தனை ஆண்டுகளில் 3 மடங்காக மாறும் என்பதை தெரிந்து கொண்டு விடலாம்.

எப்போதும் உங்கள் சேமிப்பு 2 மடங்காக மாறும் என்பதற்கும் தனி ஃபார்முலா இருக்கிறது. இவற்றை பயன்படுத்தினால் எத்தனை ஆண்டுகளுக்கு பின் நீங்கள் நினைக்கும் வருமானம் கிடைக்கும்? என்பதைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்ய முடியும்.

உங்கள் சேமிப்பு 3 மடங்காக மாற.. எத்தனை ஆண்டுகள் எடுக்கும்? இந்த சிம்பிள் ட்ரிக் போதும்!

உங்கள் சேமிப்பு 3 மடங்காக மாற எடுக்கும் காலம் = 114/வருடாந்திர வட்டி விகிதம்

உதாரணமாக நீங்கள் 6 சதவீத வருடாந்திர வட்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுடைய முதலீடு 19 (114/6) வருடங்களில் 3 மடங்காக உயரும். அதுவே 8 சதவீதம் என்றால் 14.25 (114/8) வருடங்கள் ஆகும். 10 சதவீதத்திற்கு 14.4 (114/10) வருடங்கள் எடுக்கும். 12 சதவீத வட்டிக்கு 9.5 வருடங்கள் ஆகும்.

ஒரு முதலீட்டாளர் ரூ.1 லட்சத்தை 12 சதவீத வருடாந்திர வட்டியில் முதலீடு செய்கிறார் என்றால், அந்த ரூ.1 லட்சம் ரூ.3 லட்சமாக மாறுவதற்கு 9.5 ஆண்டுகள் ஆகும். புது வீடு வாங்குவதற்காக சேமிப்பது, குழந்தையின் கல்விக்காக சேமிப்பது அல்லது ஓய்வுக்காக சேமிப்பது என உங்கள் அனைத்து வாழ்க்கை இலக்குகளுக்கும் ஏற்ப இந்த ஃபார்முலாவை பயன்படுத்தலாம்.

இந்த ஃபார்முலா உங்களுக்கு மிகவும் எளிதான முறையில் கணக்கீட்டை வழங்கிவிடும். ஆனால் இது தோராயமான மதிப்பீடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு சேமிப்பாக இருந்தாலும் அதற்கு வரி விதிக்கப்படும். பணவீக்கம் மாற்றங்கள் சந்தைக்கு இறக்கங்கள் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் இந்த மதிப்பீட்டில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+