டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
வேகம், நவீன தொழில்நுட்பங்கள் என அனைத்து அம்சங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் பெயர் பெற்றுள்ளன. இந்நிலையில் கனடா , சிலி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய வந்தே பாரத் ரயில்களின் விலை குறைவு என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஏனெனில் இதே சிறப்பு அம்சங்கள் கொண்ட ரயில் பெட்டிகளை வெளிநாடுகளில் தயாரிக்கும் போது 160 முதல் 180 கோடி ரூபாய் வரை செலவாகிறது. இந்தியாவில் 120 முதல் 130 கோடி ரூபாய்க்கு உள்ளாகவே இத்தகைய ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
எனவே வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போதும் கூட மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில்கள் 52 நொடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டி விடுகிறது. இது ஜப்பானின் புல்லட் ரயில் கூட 54 நொடிகளில் தான் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்று வேகத்தை எட்டுகிறது. இதுவும் வெளிநாடுகள் வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்களில் எரிபொருள் பயன்பாடு குறைவாக இருக்கிறது. எனவே இத்தகைய நவீன அம்சங்கள் கொண்ட மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் ரயில்களுடன் ஒப்பிடும் போது, அனைத்து அம்சங்களிலும் இது சிறந்ததாக இருக்கிறது என்பதால் இதனைக் வாங்க வெளிநாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மத்திய அரசும் இந்த ரயில்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் புதிதாக 31 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதைகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூடுதலாக 40,000 ரயில் பாதைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புல்லட் ரயில் தயாரிக்கும் தயாரிக்கும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான காவச் அமைப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவுவதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். காவச் அமைப்பு நிறுவப்பட்ட இடங்களில் எல்லாம் ரயில் விபத்துகள் நேரிடுவது 80 சதவீதம் வரை குறைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications