கனடா அரசு அண்மை காலமாகவே தங்களின் பொருளாதார, குடியேற்ற, வேலைவாய்ப்பு கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கனடா அரசு தாங்கள் பிரபலமாக வழங்கிய 10 ஆண்டுகால டூரிஸ்ட் விசா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
கனடா அரசு டூரிஸ்ட் விசா வழங்கும் தங்களுடைய நடைமுறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. கனடா அரசு தங்கள் நாட்டுக்கு அடிக்கடி வரும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான டூரிஸ்ட் விசாவை வழங்கி வருகிறது.

இந்த நடைமுறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பலரும் கனடா சென்று தங்குவதற்கு இந்த விசாவை பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென அந்தத் திட்டத்தை கனடா அரசு ரத்து செய்துள்ளது.
கனடாவை பொறுத்தவரை அண்மைக்காலமாகவே அங்கே இருக்கும் நபர்களுக்கு போதிய வீட்டு வசதி ஏற்படுத்தி தர முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. பொருளாதார சிக்கல் ஒரு புறம் ,அரசியல் சிக்கல் ஒரு புறம் அதே வேளையில் அங்கே வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவது என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் வெளிநாட்டவர்கள் நீண்ட காலம் வந்து கனடாவில் தங்குவதை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் இத்தனை ஆண்டு காலம் வழங்கி வந்த 10 ஆண்டுகால விசா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பாலிசியின் கீழ் ஒரு குறிப்பிட்ட விசாவின் வேலிடிட்டி மற்றும் அதற்கான நுழைவு தகுதியை அந்தந்த அதிகாரிகளே முடிவுக்கு முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
எனவே அடிக்கடி கனடா செல்ல வேண்டி இருக்கும் நபர்கள், அடிக்கடி விசா எடுக்க வேண்டும், அடிக்கடி அதற்காக ஒரு தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும்.
எனவே நீண்ட காலம் அவர்கள் தற்காலிகமாக கனடாவில் தங்குவது நிறுத்தப்படும். கனடாவின் இந்த புதுப்பிக்கப்பட்ட விசா நடைமுறை மூலம் அந்நாடு தங்களுடைய குடியேற்ற கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது.
கனடாவில் தற்காலிகமாக வந்து குடியிருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு வீட்டு வசதி மற்றும் பிற ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் அந்நாட்டு அரசு பல சிரமங்களை சந்தித்து வருகிறது. எனவே நாட்டிற்குள் வரும் நபர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications