இளம் பெண்ணுக்கு ரூ.290 கோடி பரிசு.. 5 மெர்சிடிஸ் பென்ஸ், விமானம், சொகுசு வீடு வாங்கி அசத்தல்!

லாட்டரியில் கோடி கணக்கில் உங்களுக்கு பரிசு கிடைத்தால் என்ன செய்வீர்கள். பொதுவாக பலரும் சொகுசு வீடு, சொகுசு கார்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள் என பலவற்றையும் வாங்கி குவிப்போம்.

அப்படி தான் கனடாவின் ஒரு இளம்பெண்ணுக்கும் இப்படி இன்ப அதிர்ச்சியான அனுபவம் கிடைத்துள்ளது.

அப்பெண்ணின் பிறந்த நாள் பரிசாக அவரது தாத்தா லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்துள்ளார்.

எப்படி வாங்குவது?

எப்படி வாங்குவது?

அப்படி விளையாட்டாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு தான் பெரும் பரிசு கிடைத்துள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் தன்னால் ஒரு லாட்டரி சீட்டினை எப்படி வாங்குவது என்பது அப்பெண்ணுக்கு தெரியாது என்பது தான். அப்பெண்ணின் பெயர் ஜூலியட் லாமோர். அவர் கனடாவை சேர்ந்தவர்.

என்ன லாட்டரி?

என்ன லாட்டரி?

தனது தாத்தா பிறந்த நாள் பரிசாக கொடுத்த பணத்தில் ஏதேனும் வாங்க கடைக்கு சென்ற சிறுமியை, லாட்டரி வாங்க கூறியது அவரது தாத்தா தானாம்.

ஆனால் அந்த லாட்டரியை கூட எப்படி வாங்குவது எனத் தெரியாத அந்த பெண், அவரது தாத்தாவின் உதவியுடன் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் lotto 6 -49 லாட்டரியை வாங்கியுள்ளார்.

மறந்துபோன லாட்டரி

மறந்துபோன லாட்டரி


ஆனால் அந்த லாட்டரி வாங்கியதையே மறந்த ஜூலியட் தனது பக்கத்து வீட்டுக் காரர் பரிசு வென்றதை அறிந்ததும், அவரும் டிக்கெட் வாங்கியதை நினைவுகூர்ந்துள்ளார். அந்த பெண் தனக்கு ஏதேனும் பரிசு கிடைத்துள்ளதா? என்று பார்ப்பதற்காக ஆப் மூலம் செக் செய்துள்ளார். அப்படி திறந்தவருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது எனலாம். இந்திய மதிப்பில் 290 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக செய்திகள் காட்டியுள்ளது.

இவ்வளவு பரிசா?

இவ்வளவு பரிசா?

இப்படி என்னவென்றே தெரியாமல் வாங்கிய அந்த லாட்டரிக்கு தான் அன்று பரிசு கிடைத்துள்ளது. அதுவும் 290 கோடி ரூபாய் பரிசு. இது உண்மையில் ஜூலியட்டுக்கு ஜாக்பாட் என்றே கூறலாம்.

இந்த உண்மை அறிந்த ஜூலியட் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளார். இந்த ஹேப்பியான விஷயத்தினை தனது குடும்பத்தினருக்கும் பகிர்ந்துள்ளார்.

வித விதமாக முதலீடு?

வித விதமாக முதலீடு?

இப்படி விழுந்த ஜாக்பாட் பரிசில் ஜூலியட், 2 கோடி ரூபாய் மதிப்பிற்கு அவரின் 5 குடும்ப உறுப்பினர்களுக்கும் கார் வாங்கி கொடுத்துள்ளாராம். இது தவிர 100 கோடி ரூபாய் மதிப்பிலான விமானத்தை வாங்கியுள்ளாராம். இதே லண்டனில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவினையும் வாங்கியுள்ளார். 150 கோடி ரூபாயினை எதிர்காலத்திற்காக சேமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜூலியட் தனது தந்தையின் உதவியுடன் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டாக்டர் தான் கனவு

டாக்டர் தான் கனவு

ஜூலியட் தற்போது மருத்துவ படிப்பினை படித்து வருவதாகவும், பரிசு கிடைத்தது என்பதற்காக நான் படிப்பை விட மாட்டேன். நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது தான் என்னுடைய ஆசை.

உலகம் முழுக்க பல இடங்களுக்கு செல்ல ஆசை இருக்கும், இது என் தாத்தா, அம்மா மற்றும் அப்பாவுடன் செல்ல விரும்புகிறேன். ஆக எனது படிப்பு முடிந்தவுடன் உலகம் முழுக்க சுற்றி பார்க்க வேண்டும் என கூறுகிறார்.

 இது தான் அடையாளம்

இது தான் அடையாளம்

எவ்வளவு தான் பெரிய பணக்காரராக இருந்தாலும் உங்களை பணம் ஒரு மனிதராக பார்க்காது, நீங்கள் செய்யும் வேலை தான் உங்களுக்கு ஒரு அடையாளம் என்று கூறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+